bsnleu

bsnleu

welcome

welcome

Tuesday, 13 June 2017

பொதுத்துறை நிதியை வீணடிக்க -மோடி அரசு உத்தரவு . . .

BSNL உள்ளிட்ட பல பொதுத்துறைகளின்  நிதியை வீணடிக்க -மோடி அரசு ஒரு மக்கள் விரோத உத்தரவு . . .வெளியிட்டுள்ளது அதன் படி இந்தியா முழுவதும் 583 இடங்களில், அதில் தமிழகத்தில் 5 இடங்கள் அதாவது தர்மபுரி, கரூர், திருச்சி நகரம், திருச்சி ஊரகம், மற்றும் தேனி ஆகிய இடங்களில், மோடி  அரசின்  மூன்று ஆண்டு சாதனைகளை  விளக்க வேண்டுமென மோடி அரசு மோசடி உத்தரவு. ஏற்கனவே, மத்திய ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளால் நலிவுற்று வருவதை சீர் செய்ய அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் கடுமையாக உழைத்து வரும் சூழலில், மோடி அரசின் மோசமான உத்தரவு ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனமும் பல லட்ச ரூபாயை தேவையற்ற செலவு  செய்வதற்கான ஏற்பாட்டை கண்டித்து 12-06-17 அன்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 அதன் ஒரு  பகுதியாக மதுரை BSNLபொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக ஊழியர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் BSNLEU மாவட்ட செயலர் தோழர் சி. செல்வின் சத்தியராஜ், SNEA மாநில உதவிச் செயலர் தோழர்.எம். சந்திரா சேகர் AIBSNLEA மாவட்ட செயலர் தோழர். எ. அருணாசலம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். BSNLEU பொதுமேலாளர் அலுவலக கிளை செயலர் தோழர்.ஜி. மனோகரன் கண்டன கோஷம் எழுப்பினார். இறுதியாக BSNLEU மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். வி. ராஜேந்திரி நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment