bsnleu

bsnleu

welcome

welcome

Friday, 23 June 2017

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை அதானிக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு...

தொடர்ந்து லாபத்தில் இயங்கும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மத்திய பாஜக அரசின் தவறான போக்கை கைவிடவும், பொதுத் துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் துறைமுக நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை துறைமுகத்தில் நிலக்கரியை கையாளக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதனைத் தொடர்ந்து எண்ணூரில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் துணைத் துறைமுகம் உருவாக்கப் பட்டது. கடலோரம் உள்ள நிலங் களையெல்லாம் இழந்ததால், காட்டுப்பள்ளி,அத்திப்பட்டு, வாயலூர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
ரூ.4 ஆயிரத்து 800 கோடியில் 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எண்ணுர் காமராஜர் துறைமுகம் 2013-ல் மத்திய அரசின் மிகவும் லாபகரமான துறைமுகம் என்ற விருதை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்கள் பட்டியலில் இடம் பெற்றுள் ளது. மேலும் ஆண்டு தோறும் தமிழக மின்சார வாரியத்திற்கும், தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து 250 லட்சம் டன் நிலக்கரி கையாளப்படுகிறது.ஆண்டுக்கு 3 லட்சம் நிஸான், ஃபோர்டு `ஹூண்டாய் கார்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் இறக்குமதி செய்யப்படுகிறது.இப்படி ஏற்றுமதி,இறக்குமதி போன்ற நடவடிக்கைகளால் 2015-ல் மட்டும் ரூ.353 கோடி லாபம் ஈட்டியுள்ளது.இது 2016-ல் ரூ.450-கோடி லாபம் எடுத்துள்ளனர்.இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் கையாளும் மொத்த சரக்குகளில் 19 விழுக்காடு வரை காமராஜர் துறைமுகத்தில் மட்டும் கையாளப்படுகிறது.இந்நிலையில் தற்போது ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரமாண்டமான பொதுத்துறை நிறுவனத்தைத் தான் மோடி அரசு பெரும் முதலாளியான அதானிக்கு வழங்கத் துடிக்கிறது.
அப்படி வழங்கினால் ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பறிபோகும்,இறக்குமதி பொருட்களின் மீது விலைவாசி உயரும். குறிப்பாக தேசத்தின் பாதுகாப்பு பறிபோகும் என்பதால் இந்த துறைமுகத்தை தனியாருக்கு விற்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு திருவள்யர் மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார். இதில் காமராஜர் துறைமுக ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிக்குமார், காமராஜர் துறைமுக அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குணசேகர்பொற் செல்வன்,சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜி.வினாயகமூர்த்தி ,நரேஷ்குமார், .ஜெயவேல் (வடசென்னை அனல் மின் நிலையம்),பரந்தாமன் (எல் அண்டு டீ),சதீஷ் (வல்லூர் அனல் மின் நிலையம்) உட்பட பலர் பேசினர்.இதில் ஒப்பந்த தொழிலாளர்கள், சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment