bsnleu

bsnleu

welcome

welcome

Saturday, 17 June 2017

ஜூன்-17, வாஞ்சிநாதன் நினைவு நாள் . . .

 இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானதுதமிழகத்தில்சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த செம்மல்கள் வரிசையில்கலெக்டர் ஆஷ் கொலைக்கு காரணமான'வீரன் வாஞ்சிநாத'னுக்கும் முக்கிய இடம் உண்டு.
நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில், 1886-ம்   ஆண்டு   ரகுபதி ஐயர்-   ருக்மணி   தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்சங்கரன்என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.
வாஞ்சிநாதன் மிகவும் மதித்துப் போற்றிய .சிதம்பரனார் மற்றும்., சுப்ரமணிய சிவா ஆகியோரைநெல்லை கலெக்டர் ராபர்ட்வில்லியம் டி எஸ்கார்ட் ஆஷ் துரை கைது செய்து சிறையில் தள்ளினார்.
இச்சம்பவம் வாஞ்சியின் மனதை புரட்டிப் போட்டதுஇதற்கு காரணமான ஆஷ் துரையை பழிவாங்க உறுதி பூண்டார்அவரைகொலை செய்வதற்கான நாளையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
1911 ஜூன் 17 ஆம் தேதி காலை மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் ஆஷ் துரை தனது குடும்பத்தாருடன் கொடைக்கானலுக்குச்  புறப்படத் தயாராக இருந்தார்.
யாரும் எதிர்பாராதவகையில் ரயில் பெட்டிக்குள் நுழைந்துதிட்டமிட்டபடி கலெக்டர் ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.
ஆங்கிலேய அதிகாரிகள் வாஞ்சியை சூழ்ந்து கொண்டனர்எதிரிகளின் கையில் சிக்கி உயிரை விடுவதைவிடதானே தன்உயிரைப் போக்கிக் கொள்வது மேல் என்று கருதிய வாஞ்சிநொடிப் பொழுதையும் வீணடிக்காமல் அதே துப்பாக்கியால்தன்னைத்தானே சுட்டுவீர மரணம் எய்தினார்.நினைவை போற்றுவோம்.

No comments:

Post a Comment