அன்புள்ள தோழர்களே,
இரண்டு ஆண்டு கால இடைவெளிக்குப் பின், தமிழ் மாநில கவுன்சில் கூட்டம், சென்னை தலைமை பொதுமேலாளர் அலுவலகத்தில், 6.6.2017 அன்று தலைமை பொதுமேலாளர் திருமிகு. N. பூங்குழலி ITS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொதுமேலாளர் (மனிதவளம்) திருமிகு. T.பூங்கொடி அனைவரையும் வரவேற்றார்.
ஊழியர் தரப்பு தலைவர் தோழர். K. நடராஜன் தனது அறிமுக உரையில் BSNL சேவை தமிழகத்தில் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது; இந்த முன்னேற்றத்திற்கு நிர்வாகமும், ஊழியர்களும் இணைந்து பாடுபட்டதே காரணம் என்பதைச் சுட்டிக் காட்டி எதிர்காலத்திலும் நமது செயல்பாடு தொடரும் என்று கூறினார்.  மாநில நிர்வாகம் சேவை மேம்பட எடுத்த அனைத்து வகையான முன் முயற்சிகளுக்கு
ஊழியர் தரப்பு ஒத்துழைப்பு நல்கியுள்ளது.  மாநில மட்டத்தில் உள்ளது போன்ற தீர்வு தலமட்டங்களில் இணக்கமான நிலை இல்லை.  மாவட்ட பிரச்சனைகள் குறித்து பின்னர் விவாதிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
ஊழியர் தரப்பு செயலாளர் தோழர் S.செல்லப்பா அவர்கள் தனது அறிமுக உரையில் கவுன்சில் கூட்டத்தின் இரண்டு பிரதான நோக்கங்கள், தமிழகத்தில் BSNL சேவை மேம்பாடு குறித்ததும், ஊழியர்களின் பிரதான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுமே;  ஆனால் கவுன்சில் கூட்டம் இரண்டு ஆண்டு காலத்துக்குப்
பின் நடைபெறுகிறது; இந்த கூட்டத்தின் விவாதத்துக்கான
பிரச்னைகள் மார்ச் மாதத்திலேயே அளிக்கப் பட்டிருந்தும்
மிக கால தாமதமாக இக்கூட்டம் கூட்டப் பட்டுள்ளது; வருங்காலத்தில் குறைந்த பட்சம் 4 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாநில கவுன்சில் கூட வேண்டும் என்று வலியுறுத்தியும், நிர்வாகத்துக்குக் கொடுக்கப்பட்ட
சில பிரச்னைகளை நிர்வாகம் பேச மறுத்துள்ளது; குறிப்பாக ஒப்பந்த தொழிலாளர்களின்
பிராவிடண்ட் ஃபண்ட் தொகை உரிய நேரத்தில் பிராவிடண்ட் ஃபண்ட் அலுவலகத்துக்கு
செலுத்தப் பட வேண்டும் என்பது உட்பட  மாநில தலைமை பொது மேலாளர் அலுவலக உத்தரவுகள் அமுல்படுத்தப் படாமல், BSNL  நிறுவனத்தின் பணம், ஒப்பந்தகாரர்களால் கொள்ளையடிக்கப்
படுவது குறித்தும், மேலும், ஒரு புறம் தர்மபுரியில் நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்கக் கூட்டத்துக்கு BSNL பணம் பல லட்சம் ரூபாய்கள் விரயம் செய்யப் பட்டுள்ளது; மறு புறம் பல ஒப்பந்த தாரர்கள் பல லட்சக்கணக்கான
ரூபாய்களை PF அலுவலகத்தில் செலுத்தாமல் உள்ளனர்.  இது உட்பட ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகளில் நிர்வாகத்தின் உத்தரவுகள் அமலாக்கப்படாமல் உள்ளன.  மற்றும் மார்ச் 2015- இல் சென்னை உயர் நீதிமன்றம் நிலுவைத் தொகைக்கான உத்தரவு வழங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் ஓர் ஊழியருக்குக் கூட நிலுவைத் தொகை அளிக்கப் படவில்லை; மாநில நிர்வாகத்தின்
மேல் நம்பிக்கை உள்ளதால் சங்கங்கள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் படாமல் உள்ளது ஆகிய அம்சங்களை தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்தார்.
தலைமை பொதுமேலாளர் தனது தலைமையுரையில், கவுன்சில் கூட்டம் தாமதம் குறித்து தான் வருத்தம் தெரிவிப்பதாகவும்,
வருங்காலத்தில் 4 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப் படும் என்றும், ஊழியர் தரப்பு-நிர்வாக தரப்பு என்ற பேதமின்றி, கடந்த காலத்தில் புன்னகையோடு சேவை, நலந்தானா திட்டங்களை சிறப்பாக அமுல்படுத்தி, வருமானத்தை அதிகரித்து அனைத்து இலக்குகளை வென்றெடுத்ததற்கு
அனைத்து சங்கங்களுக்கும்
நன்றியையும், பாராட்டுக்களையும்
தெரிவித்துக் கொண்டார். எனினும் ஏப்ரல், மே மாதங்களில் இணைப்புகளும், வருமானமும் வீழ்ச்சி அடைந்துள்ளதைக் கவலையுடன் சுட்டிக்காட்டி, வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்துவதன் மூலமே இவற்றை மேம்படுத்த முடியும் என்றும், அனைத்து உபகரணங்களும் மாநில அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன: மாவட்டங்கள் கடிதம் எழுதினால் தேவையான உபகரணங்கள் உடனடியாக வழங்கப் படும் என்றும் தெரிவித்தார்.  மேலும் மாநில கவுன்சில் ஆய்படு பொருட்களில் நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் உட்பட அனைத்தையும் தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும், ஆய்படு பொருட்கள் நீக்கத்தில் ஊழியர் தரப்பின் அதிருப்தியை MINUTESல் பதிவு செய்து கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
பின்வரும் பிரச்னைகள் விவாதிக்கப் பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன :
1.  
பரிவு அடிப்படையிலான நியமனங்கள் :
31.3.2016 வரை மாநில அலுவலகத்துக்கு
வந்த 135 மனுக்கள் பரிசீலிக்கப் பட்டு, 39 பேருக்கு நியமனங்கள் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளன.  தர்மபுரியில் 2 பேருக்கும், வேலூரில் ஒருவருக்கும் விடுபட்டுள்ளது
சுட்டிக் காட்டப் பட்டது. விடுபட்ட பட்டியல் தந்தால் அவையும் பரிசீலிக்0கப் படும் என்றும், 2016-17 ஆம் ஆண்டிற்கான பரிவு அடிப்படையிலான பணி நியமனத்திற்காக
1.4.2016 முதல் 31.3.2017 வரை மாவட்ட அலுவலகங்களுக்கு வந்துள்ள மனுக்கள் 20 நாட்களுக்குள் மாநில அலுவலகத்துக்கு அனுப்பப் பட வேண்டும் என தலைவர் முடிவு தெரிவித்தார்.
2.  
நாட்குறிப்பேடு, டவல், டம்ளர் உள்ளிட்டவற்றுக்கான ரொக்கப் பணம் :
அனைத்து ஊழியர்களுக்கும்
ரூ. 750 ஆக உயர்த்தப் படும் என முடிவு செய்யப் பட்டது.
3.  
CYMN- இல், GSM எண்களில் 94 லெவல் :
94 லெவலில் சிம் பற்றாக்குறை உள்ளதால் புதிய 8300 லெவல் சிம்கார்ட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 
எனினும் கடந்த இரண்டு மாதங்களில் 22,100 சிம்கார்ட்கள்
94 லெவல் சிம்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும், FRANCHISEகளுக்கு 20,600 சிம் கார்ட்கள் வழங்கப்பட்டுள்ளது
என்றும் தெரிவிக்கப்பட்டது.
4.  
சேல்ஸ் பிரிவு ஊழியர்களுக்கு ப்ரீ-பெய்ட் சிம்களில் பேசும் நேர அதிகரிப்பு :
விஜய் டீமில் உள்ள வர்களுக்கு 200 ரூபாய்களுக்கு
கூடுதலாக 300 ரூபாய்கள் வழங்குவதற்கான உத்தரவு 02.03.2017 அன்று வெளியிட்டுள்ளதாகவும், அதனை மாவட்டங்களில் உடனடியாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது.
5.  
புதிய பதவி உயர்வு திட்ட அமலாக்கத்தில் திருத்தங்கள் :-
சேலம், நீலகிரி மாவட்டங்களில் விருப்பம் தெரிவித்துள்ள
ஊழியர்களுக்கு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.  
ப்ராஜெக்ட் விஜய் திட்டத்தில் மார்க்கெட்டிங் பிரிவு ஊழியர்களுக்கு இன்செண்டிவ் வழங்குதல் :
மாவட்டங்களில் தவறான புரிதல் காரணமாக நிறுத்தப் பட்டிருந்தது. 01.10.2015 முதல் 30.09.2017 வரை இன்செண்டிவ் வழங்க ஏற்கனவே மாவட்டங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப் பட்டுள்ளது,
7.  
விதி-8- இன் அடிப்படையில் தமிழ் மாநிலத்திற்குள் இடமாற்றல் மனுக்கள் ஒப்புதல் அளிக்கப் பட வேண்டும் :
திருச்சி, காரைக்குடி, வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 14 மனுக்கள் குறிப்பாக முதுகுளத்தூரிலிருந்து தூத்துக்குடி மற்றும் கடலூரிலிருந்து பாண்டிச்சேரி உள்ளிட்ட இட மாற்றல் பிரச்னைகள் நிலுவையில் உள்ளது கவனத்திற்கு கொண்டு வரப் பட்டது.  உடனடியாக தீர்க்கப் பட வேண்டும் என முடிவு செய்யப் பட்டது.
8.  
முந்தைய மாநில கவுன்சில் கூட்ட முடிவின்படி, அனைத்து ஊழியர்களுக்கும் BSNL   பைகள் வழங்குதல் :
நிதி நெருக்கடி காரணமாக பூர்த்தி செய்ய முடியவில்லை. விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும்.
9.  
தமிழகம் முழுவதும், அலுவலகம், தொலைபேசியகம், குடியிருப்பு, ஆய்வு குடியிருப்பு கட்டிடங்கள் பராமரிக்கப் படுதல் :
8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டது. 3.6 கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும்.
10.            
இம்யூனிட்டி இடமாற்றல்கள் தாமதமின்றி அமுலாக்கம் :
அனைத்து இம்யூனிட்டி இடமாற்றல்களும் அமுலாக்கப் பட்டுள்ளன.
11.            
மெடிக்கல் கமிட்டி :
மெடிக்கல் பில்கள் தாமதம், கூடுதல் மருத்துவமனைகளுக்கு
ஒப்புதல் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மெடிக்கல் கமிட்டி பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப் பட்டுள்ளது :
DGM (ADMN), DGM(FIN),
AO(PENSION CELL), AGM(SR&WLF) ஆகிய அதிகாரிகள் மற்றும் BSNL ஊழியர் சங்கத்திலிருந்தும், NFTE சங்கத்திலிருந்தும் தலா 2 பிரதிநிதிகள்
12.            
COAXIAL REPEATER STATION- களைக் கையகப் படுத்துதல் :-
STRலிருந்து மாநிலத்திற்கு வழங்கப்பட்ட இடங்கள் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
13.            
ஊழியர்கள் MOU வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தொகை தருவதில் தாமதம் ஏற்பட்டதால் பிடிக்கப்படும் அபராத வட்டி:-
கார்ப்பரேட் அலுவலகம் இதற்கான நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.  இதனால் ஏற்படும் இழப்பை ஊழியர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என ஊழியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் இந்த பிரச்சனையை அகில இந்திய கவுன்சிலுக்கு
பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
14.            
TSM தோழர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரை அமலாக்கம்:-
இது தொடர்பாக கார்ப்பரேட் அலுவலக உத்தரவு அமலாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. 
ஊழியர் தரப்பில் இவர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையினை அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 
கார்ப்பரேட் அலுவலகத்தில் விளக்கம் கேட்டு அமலாக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு மாதா மாதம் முதல் வாரத்தில் சம்பள பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் தெரிவிக்கப்பட்டது.
15.            
ஊழியர்களுக்கு அதிகமாக வழங்கப்பட்ட பணத்தை திரும்ப பிடிப்பதை நிறுத்துவது:-
இது தொடர்பாக மாவட்டங்களில் இருந்து தகவல்கள் வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. 
கார்ப்பரேட் அலுவலக உத்தரவை சுட்டிக்காட்டி விரைவில் அனுப்ப வேண்டும் என ஊழியர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. 
விரைவில் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு அனுப்ப உறுதி அளிக்கப்பட்டது.
16.            
ப்ராஜக்ட் சஞ்சய் தமிழகத்தில் அமலாக்கம்:-
தமிழக தலைமை பொது மேலாளர் அலுவலகத்திலும்
ப்ராஜக்ட் சஞ்சய் அமலாக்கப்பட்டதை சுட்டிக்காட்டி மாவட்டங்களில்
விடுபட்ட இடங்களிலும் இதனை விரைவில் டெண்டர் காலம் முடிவடைந்தவுடன் அமலாக்க வழிகாட்டியுள்ளார்.
17.            
விடுபட்ட பகுதிகளுக்கு HRA:-
இது தொடர்பான 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் மாநில நிர்வாகத்திற்கு
ஊழியர் தரப்பில் வழங்கப்பட்டது.  கார்ப்பரேட் அலுவலகத்தில் விளக்கம் கேட்டு அமலாக்கப்படும்
என தெரிவிக்கப்பட்டது.
18.            
உரிய தேதியிலிருந்து NEPP பதவி உயர்வு:-
தோழர் N.ராமசாமி SSS(O) சென்னை அவர்களின் பிரச்சனையை நிதி மற்றும் நிர்வாக அதிகாரிகள் இணைந்து விரைவில் தீர்வு காண வழிகாட்டப்பட்டுள்ளது.
19.            
கவுன்சிலில் எடுக்கப்படாத பிரச்சனைகளில் ஒன்றான தலமட்டங்களில்
WORKS COMMITTEE மற்றும் LOCAL COUNCIL கூட்டங்கள் விரைவாகவும், உரிய கால இடைவெளியிலும் நடத்த மாவட்ட பொது மேலாளர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.
மிகுந்த கால தாமதத்திற்கு பின் இந்தக் கூட்டம் நடைபெற்றாலும் நல்லதொரு சுமுகமான முறையில் நடைபெற்றது.  பிரச்சனைகளின் தீர்விற்கு தலைமை பொது மேலாளர் திருமிகு N.பூங்குழலி ITS அவர்களின் வழிகாட்டலும், மற்ற அதிகாரிகளின் சுமுகமான ஒத்துழைப்பும் உதவி செய்துள்ளது.  இதற்காக தமிழ் மாநில கவுன்சிலின் ஊழியர் தரப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  மாநில கவுன்சிலின் முடிவுகள் விரைவில் அமலாக்கப்படும்
என நம்புகிறோம்.                                               வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள,                   K.நடராஜன்                                                                   S.செல்லப்பா
                                தலைவர்                                                              
செயலாளர்
 
 
 
No comments:
Post a Comment