bsnleu

bsnleu

welcome

welcome

Tuesday, 20 June 2017

ஊதிய மாற்றம் கோரி-எழுச்சியுடன் மதுரையில் தர்ணா...

அருமைத்தோழர்களே !BSNL ஊழியர்கள்- அதிகாரிகளின் ஊதிய மாற்று பேச்சுவார்த்தையை துவக்கக் கோரி ஊழியர்கள் - அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 20-06-17 அன்று மதுரையில்  தர்ணா போராட்டம் நடைபெற்றது.1.1.2017 முதல் அமல்படுத்த வேண்டிய ஊதிய மாற்றத்திற்கான பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும், 1.1.2017 முதல் ஓவ்வூதிய மாற்றம் செய்திட வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 விழுக்காடு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும், சம்பள விகிதத்தின் அடிப்படையில் பென்ஷனுக்கான ஊழியர் பங்கீட்டை பிடித்தம் செய்ய வேண்டும், BSNLவளாகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தடை செய்யும் கார்ப்பரேட் அலுவலக கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது
இந்திய நாடு முழுவதும் நடை பெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஊதிய மாற்றம் கோரி-எழுச்சியுடன் மதுரையில் தர்ணா... தோழர்கள் விஜயகுமார், SNEA மாவட்டத்தலைவர் ,பிச்சைக்கண்ணு, BSNLEU,மாவட்டத்தலைவர்  ஆகியோர் கூட்டுத் தலைமையில் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தை, BSNLEU மாநில  அமைப்புச் செயலர் தோழர்.K..பழனிக்குமார் துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். 
 போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி BSNLEU மாவட்டச் செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ்   AIBSNLOA  மாவட்டச்செயலர் தோழர்.முருகன் ஆகியோர் உரையாற்றினர். அதன்பின் தோழர், அழகர்சாமி ACS-SNEA, தோழர்கள், வைத்திலிங்க பூபதி, அழகு பாண்டியராஜா, சூரியன், சீனிவாசன், ரிச்சர்டு, ஜான் போர்ஜியா , பி. சந்திரசேகர், விஜயகுமார் ஆகியோரும் போராட்ட கோரிக்கைகளை விளக்கி பேசினர். இறுதியாக சந்திர சேகர் SNEA-ACS, நிறைவுரை நிகழ்த்தினார் . போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும், என். செல்வம் நன்றி கூறினார். 40 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment