BSNL-தொலைபேசி நிலையங்களையும், அலுவலகங்களையும் அன்றாடம் சுத்தம் செய்யம், அத்தியாவசிய பணிகளை செய்யும் ஹவுஸ் கீப்பிங் பணியை செய்யக்கூடிய ஒப்பந்த ஊழியர்கள், மாதக்கணக்கில் செய்த வேலைக்கு கூலி கிடைக்காமல் குறிப்பாக மே-17 சம்பளம் இது தேதி வரை வழங்காமல் ஒப்பந்தக்காரர் உறங்குவதும், இதை முறைப்படுத்த வேண்டிய நிர்வாகமோ வேடிக்கை பார்ப்பதும் என்ன நியாயம். . .
மாதாமாதம் 7-ந் தேதிக்குள் ஒவ்ஒவொரு ஒப்பந்த ஊழியரின் வாங்கிக் கணக்கில் சம்பளத்தை வழங்க வேண்டுமென கார்பரேட் அலுவலக உத்தரவு, மாநில நிர்வாக உத்தரவு எல்லாம் இருக்கின்றது. ஆனால் அதை அமல் படுத்த மறுக்கும் ஒப்பந்தக்காரரை ஒழுங்கு படுத்த வேண்டிய நிர்வாகம் கன்டுகொள்ளாமல் அலட்சிய போக்கை கடைப்பிடிக்கின்ற்து. ஒப்பந்தகாரர் தனது பில் பட்டுவாடா செய்யப்படவில்லை என்ற காரணத்தை சொல்லி தப்பிக்க முயற்சசிக்கின்றார். நிவர்த்தி செய்ய வேண்டிய நிர்வாகமோ மோடி அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க கூட்டத்திற்கு பல லட்சம் செலவு செய்வதற்கான முஸ்தீப்பு பணிகளில் மிக தீவீரமாக இருக்கின்றது.
நிர்வாகம் உடனடியாக, மேலும் தாமதிக்காமல் ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தை ஏற்பாடு செய்யாவிட்டால் .... ஹவுஸ் கீப்பிங் ஊழியர்கள் தங்களது துப்பரவு பணியை நிறுத்தினால் எல்லாம் நாறிவிடும் என்பதை நாகரிகமாக எச்சரிக்கின்றோம். அலசசியப்படுத்தினால் அதிகாரவர்க்கம் அசிங்கப்பட்டுவிடும். அடுத்தகட்ட நடவடிக்கைக்கு எங்களை தள்ள வேண்டாம்...
14-06-17 மதியம் 1 மணிக்கு மதுரை,
தல்லாகுளம், லெவல்-4 பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.வி. சுப்புராயலு தலைமை தாங்கினார். தோழர்கள்,எஸ். சோணைமுத்து, எஸ். சூரியன், சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோர் கண்டான் உரை நிகழ்த்தினார்கள். தோழர்.பி. தேசிங் நன்றியுரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்ட போராட்டத்தில் 40 பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment