BHEL ஏடிபி துறையில் மேன் பவர் காண்ட்ராக்ட் விடுவதை உடனடியாகரத்து செய்ய வேண்டும். நிரந்தரப் பணிகளில் காண்ட்ராக்ட் விடும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். உடனடியாக ஆர்டிசன் தொழிலாளர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பெல் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வாயிற் கூட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதனைத் தொடர்ந்து பெல் தொழிற்சாலை வளாகத்தில் பெல் அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கி ஜூன் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3 ஆவது நாளாகப் புதனன்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொ.மு.ச, சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஐஎன்டியுசி, திராவிடத் தொழிலாளர் கழகம், டாக்டர் அம்பேத்கர் யூனியன், பிசிஇயு, பிஎன்எஸ்யு, பிபிடபுள்யுஇ, எல்எல்எப், எம்எல்எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. முன்னதாகக் கடந்த 2 நாட்களுக்கு முன் பெல் நிர்வாக இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ஜூன் 23 ஆம் தேதி கூட்டுக்குழு சார்பில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி அடுத்த கட்டப் போராட்டம் நடைபெறும் எனக் கூட்டுக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment