அருமைத் தோழர்களே ! கடந்த சில மாதங்களாக BSNLமதுரை மாவட்டத்தின் நிலைப்பாடு மிகவும், நியாமற்றதாகவும், விதிக்கு மாறாக தன்னிச்சையான போக்கும் தொடர்கிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும் என நமது மாவட்ட சங்கம் போராட்டத்தை நடத்தியது. மாநில சங்கமும், நிர்வாகமும் உரிய முறையில் தலையிட்டது. அதன் காரணமாக நமது 2-ம் கட்ட போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாகம் இனிமேல் தங்களது நடவடிக்கை களை சீர் படுத்திக்கொள்வதாக நம்மிடம் உறுதியளித்தது. . . . .
ஆனால் நம்மிடம் ஏற்றுக்கொண்ட பல்வேறு பிரச்சனைகளின் தீர்வில் மீண்டும் மாறுபட்ட நிலையையே நிர்வாகம் எடுத்துக்கொண்டு இருக்கிறது. கூடுதலாக மதுரை தல்லாகுளம் CSC-யில் வருடாந்தர சூழல் மாற்றலில் நமது கிளை, மாவட்ட சங்கத்திடம் ஏற்றுக்கொண்டதற்கு மாறாக புதிய டூட்டி சார்ட்டை தன்னிச்சையாக வெளியிட்டுவிட்டது. எனவே, நமது மாநில சங்க வழிகாட்டுதலின் படி, தல்லாகுளம் CSC கிளை "MASS LEAVE" கடைப்பிடிப்பது, மாவட்ட சங்கம் ,மாவட்ட நிர்வாகத்திடம் "MASS DEPUTATION" நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment