bsnleu

bsnleu

welcome

welcome

Saturday, 10 June 2017

சென்னையில் விவசாயிகள் போராட்டம் தொடங்கியது . . .

சென்னையில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் வெள்ளியன்று (ஜூன் 9) தொடங்கியது. இந்தப் போராட்டம் ஜூலை 19 வரை 32 நாட்கள் தொடர்ந்து நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வறட்சி நிலவுவதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தில்லியில் ஏற்கனவே தொடர் போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து இப்போது 2-வது கட்டமாக சென்னையில் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே வெள்ளியன்று தொடங்கிய இந்தத் போராட்டத்தில் விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் பங்கேற்றனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பல கட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. எனவே அரசு தேவையான அரசாணையை வெளியிட வேண்டும்.
60 வயது முடிந்த விவசாயிகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டு வருகிறோம். இதற்கும் எந்த சாதகமான பதில் இதுவரையும் வரவில்லை.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கப்பட்ட கடனுக்காக நகைகளை ஏலம் விட வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஏலத்தை அரசு தடுத்து நிறுத்த முன் வர வேண்டும்.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அதையும் அரசு உடனே வழங்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் என்று காத்திருந்ததுதான் மிச்சம். இன்னும் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.
இதனால் இப்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 32 மாவட்ட விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அடுத்த மாதம் 10ம் தேதி வரை 32 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்
.

No comments:

Post a Comment