bsnleu

bsnleu

welcome

welcome

Thursday, 1 June 2017

தாக்குதலை கைவிடுக ! . . .

மாட்டிறைச்சி தடையை எதிர்த்து போராடுபவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும்மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்ற மத்திய பாஜக கூட்டணி அரசின் உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் மோடி அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ். ஆதரவு மாணவர்கள் சூரஜ் என்ற மாணவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சூரஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது. தாக்குதல் தொடுத்த மதவெறி அமைப்பைச் சார்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக,தமிழக காவல்துறை காயமடைந்த சூரஜ் உள்ளிட்ட மாணவர்கள் மீதும் வழக்கு தொடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்நிலையில் உணவு உரிமையை வலியுறுத்தியும் ஐ.ஐ.டி.யில் நடந்த தாக்குதலை கண்டித்தும் மாணவர், இளைஞர் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஐ.ஐ.டி. முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இவர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கி கைதுசெய்துள்ளனர். பெண் ஒருவரின் கைகளை முறிக்கும்அளவுக்கு போலீசார் நடத்தியுள்ள தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுகண்டிக்கிறது.உணவு உரிமையை வலியுறுத்தி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வது, வழக்கு தொடுப் பது போன்ற நடவடிக்கைகளை தமிழக காவல்துறை கைவிட வேண்டுமெனவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையை முறுக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.

No comments:

Post a Comment