bsnleu

bsnleu

welcome

welcome

Monday, 8 May 2017

May-8,அபூர்வ மனிதன் வி.பி.சிந்தன் ! நினைவு நாள்...

மே 8-ந் தேதி தோழர் வி.பிசிந்தன் அவர்களின் நினைவு நாள். 1987ம் ஆண்டு இதேநாளில் அவர் மறைந்தார்.அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தில் இந்தியமார்க்சிய இயக்கத்தின் முதுபெரும் தலைவர் பி.டிரணதிவே அவர்கள் “தோழர் வி.பி.சிந்தன் ஒரு அபூர்வ மனிதன்” என்று புகழ்ந்துபோற்றி தனது அஞ்சலியைத்தெரிவித்தார்.விடுதலைப் போரின் தாக்கத்தில் தேசிய இயக்கத்தின் போராளியாய்களத்திற்கு வந்த இளம் மாணவன் தான் மறையும் போது தனி உயரத்தில் நின்ற வி.பி.சிந்தன் என்கிற ஆளுமை. “போராட்டமே வாழ்க்கையாய்” என்ற வார்த்தைகளுக்குஉண்மையான இலக்கணமாக அவரது வாழ்க்கை அமைந்தது.ஒன்றுபட்ட சென்னைமாகாணத்தின் கேரளப் பகுதியில் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து கம்யூனிஸ்ட்டாய்சிந்தன் பரிணமித்துவிட்டார்அவரைப் பார்த்து இயக்கத்தின் தேவை உன்னைதமிழ்ப்பகுதிக்கு அழைக்கிறதுஇயக்கம் உன்னிடம் எதை எதிர்பார்த்தாலும் அதைத் தருகிற மார்க்சிய புரிதலும் அர்ப்பணிப்பும்உனக்கிருக்கிறதுஎனவே உடனே சென்னைக்கு புறப்படு என்று கட்சியின் முடிவை தோழர் கிருஷ்ணபிள்ளை அவர்கள் கூறினார்.அதை அக்கணமே ஆணையாய் ஏற்றுக் கொண்டு அவர் புறப்பட்டார்அமைப்பின் தேவைக்கு தனது சொந்த நலன்களை உட்படுத்திக்கொள்வது என்பதற்கு உயர்ந்த உதாரணம் ஆனார்ஒரு முழுநேர ஊழியர் எப்படி ஒரு முழுநேரப் புரட்சிக்காரன் என்பதற்குஎடுத்துக்காட்டாய் கடைசி வரை வாழ்ந்தார்ஸ்தாபன ஒழுக்கம்கட்டுப்பாடு என்பதை எவ்வளவு ஆழமான கருத்து வேறுபாடுகள்ஏற்பட்ட போதும் பேணிக் காத்தார்.அவரது மார்க்சியப் புரிதலும்அடிப்படைத் தத்துவக் கோட்பாடுகளில் அவருக்கு இருந்தவிசாலமான ஞானமும் வியப்பிற்குரியதுதொழிலாளி வர்க்கப் புரட்சி சாத்தியம்சோசலிசமே அடுத்த சமூக மாற்று என்பதில்அவருக்கு இருந்த ஆழ்ந்த நம்பிக்கைக்கு இதுவே அடிப்படைஅவர் தனது வகுப்புகளில் மார்க்சிய தத்துவத்தை விரும்பி போதிப்பார்.இந்திய மரபு வழிப்பட்ட பொருள்முதல்வாதத்தில் அவருக்கு ஆழ்ந்த தேர்ச்சி இருந்ததுசமஸ்கிருதத்தையும் அவர் அறிந்திருந்தார்.இதுபற்றி அவரது சிறு பிரசுரங்களும் வந்துள்ளனஅவரது தத்துவ வகுப்புகளில் வாழ்க்கையின் மீதும்மாற்றங்களின் மீதுமானநம்பிக்கை சாரமாய் உள்ளிறங்கும்அவரது போதனை மிகவும் இயல்பாகவும்இயற்கையாகவும் இருக்கும்குறிப்பாக நடப்புபோராட்டங்களிலிருந்தும்அனுபவங்களிலிருந்தும் உதாரணங்களையும் படிப்பினைகளையும் தருவார்அவரது தனித்தன்மைகளில்இதுவும் ஒன்றுதத்துவத் தெளிவை ஊட்டுவதில் அவரது பங்களிப்பு மகத்தானது.1964ல் கட்சி பிரிந்த பிறகு திருத்தல்வாதத்தைஎதிர்த்த கொள்கைப் போரில் அவர் பெரும்பங்காற்றினார்இந்திய ஆளும் வர்க்கம் பற்றிய நிர்ணயிப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் நிலை உருவாவதிலும் அதுபற்றிய தெளிவை அணிகளுக்கு போதிப்பதிலும் அவர் கட்சி ஸ்தாபனத்தில் பெரும்பங்காற்றினார்.அவர் பிரதானமாக தொழிற்சங்கப் பணிக்கு வந்த போது சென்னை நகரில் நமது தொழிற்சங்க இயக்கம் மிகவும்சிறியதாக இருந்ததுபெரும்பாலான தொழிற்சங்கங்கள் மற்றவர்கள் தலைமையில் இருந்ததுஅவர் தொழிற்சங்க இயக்கத்தில்நுழைந்த நேரத்தில் சென்னை சுற்றுப்புற தொழிற்சாலைகளில் பெரும் கொந்தளிப்பான நிலை இருந்ததுதொழிலாளர்கள் சட்டஉரிமைகள்பணி நிரந்தரம் போன்றவை கூட மறுக்கப்பட்டு கடும் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருந்தார்கள்முதலாளிகள்தங்களுக்கு ஒத்துப்போகிற தலைவர்களைக் கொண்ட சங்கம் அமைத்துக் கொண்டு அதனோடு தான் பேசுவேன் என்றார்கள்இந்தஅடக்குமுறையை எதிர்த்துதொழிலாளி தான் விரும்பிய சங்கத்தை அமைத்துக் கொள்ளவும்தனக்கு ஏற்பான தலைமையைத்தேர்ந்தெடுத்துக் கொள்ளவுமான போராட்டங்கள் வெடித்தன.அந்தத் தருணத்தில் இந்தப் போராட்டங்களை இணைத்துஒருமுகப்படுத்தவும்சகோதர ஆதரவு முழக்கங்களை முன்வைக்கவும்கூட்டுப் போராட்டத் தேவையை உணர்த்தவும்அரசுமுதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதை அம்பலப்படுத்தவும்அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை கூட்டாகமுன்னெடுக்கவுமான பெரும்பணியை ஆற்றியவர் வி.பி.சிதான்அதற்காக ஆளும் வர்க்கத்தின் கொலைவெறித் தாக்குதலையும்அவர் சந்திக்க நேர்ந்ததுஅதிலிருந்து மீண்டெழுந்து தன்பணியினை தொடர்ந்தார்அவரது நெடிய அரசியல் வாழ்க்கையால்,அர்ப்பணிப்பால் அவருக்கு இருந்த மரியாதையும்மற்றவர்களாலும் மறுக்க முடியாத நேர்மையும்தியாகமும் அவரை ஒருஆளுமையாக உயர்த்தியிருந்ததுஇதன் மூலம் தொழிற்சங்க இயக்கத்திற்கு புத்துணர்ச்சியை அவரால் பாய்ச்ச முடிந்ததுஒருதொழிற்சாலையில் ஒரு சங்கம் என்று சென்னையில் வேர்விட்டிருக்கிற அந்த நிலைமையை இவரது பரந்த பார்வை உருவாக்கியது.கட்சி என்பதை தொழிற்சங்க கட்சி என்று புரிந்து கொள்ளக் கூடாதுதொழிலாளி வர்க்க கட்சி என்பதை அவர் அழுத்தமாகக் கூறுவார்.தொழிலாளர் அனைவரும் நமது அடிப்படை வர்க்கம் என்று கூறுவார்அவர்களை அரசியலால் அணி திரட்டுவதில் தான் புரட்சியின்வெற்றியிருக்கிறது என்று கூறுவார்அவர் காலத்தில் இருந்த அதே நிலையை இப்போது உலகமய சூழலில் நாம்எதிர்நோக்குகிறோம்அவரது அணுகுமுறைகள் இன்றைய போராட்டங்களில் வழிகாட்டும் ஒளியாய் இருக்கின்றன.ஸ்தாபனப்பிரச்சனைகளில் வருத்தப்படுவோர்கோபமுற்றோர்சோர்வுற்றோர்ஒதுங்கி நிற்போர் போன்றவர்களை அவர் உரிமையோடுகடிந்து கொண்டு திருத்த முற்படுவார்அவர் கடைசியில் சொல்வது இதுதான்.“நீ யாருக்கும் அடிமையல்லஆனால் ஸ்தாபனக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றுபுரட்சிக்கு விசுவாசமாக இரு”.அவரது எல்லா செயல்களிலும் நடைமுறை சாத்தியப்பாடுகள் என்பதும்பொருத்தமாக கலந்திருக்கும்அவரது எந்த உரையிலும் நடைமுறை பிரச்சனைகளை சக்தியோடு எடுத்து வைத்து புரட்சிகரமுழக்கத்தோடு தான் முடிப்பார்.சோசலிச மாற்றுக்கு மக்களைத் திரட்டுவோம்புரட்சியை முன்னெடுப்போம்!

No comments:

Post a Comment