அருமைத் தோழர்களே ! மதுரை மாநகரில் அனைத்து சங்கங்களின் சார்பாக மே தினம்...சிஐடியு-ஏஐடியுசி, AIIEA, BSNLEU, TNGEA உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திங்கள் அன்று மேதினப்
பேரணி மதுரை அரசரடி மின்வாரிய
அலுவலகம் அருகில் இருந்து புறப்பட்டது.
பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ஏஐடியுசி மாநில செயலாளர் எஸ்.காசிவிஸ்வநாதன் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி
வைத்தனர். இதில் சிஐடியு மாவட்டத்
தலைவர் ஆர்.வாசுதேவன், மாவட்டச்
செயலாளர் இரா.தெய்வராஜ், பொருளாளர்
இரா.லெனின், ஏஐடியுசி மாவட்டப்
பொதுச் செயலாளர் நந்தாசிங் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர். இந் நிகழ்சியில் நமது அரங்கத்தின் சார்பாக மாவட்டச் செயலர் தோழர் செல்வின் சத்தியராஜ், தனபால், சூரியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி மேலப்பொன்னகரம், கரிமேடு,
மணிநகரம் வழியாக ஆறுமுச்சந்தியில் நிறைவடைந்தது. அதன் பின் ராயப்பன் காலை நிகழ்சியும், மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment