அருமைத் தோழர்களே! 2.5.17 அன்று சென்னையில் நமது BSNLEU மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் தோழர் எஸ். செல்லப்பா தலைமை தாங்கினார். மாநிலச் செயலர் தோழர். எ. பாபு ராதாகிருஷ்ணன் செயற்குழுவின் நோக்கம், ஆய்படு பொருள் குறித்து உரை நிகழ்த்தினார். இம் மே மாதம் 19 மற்றும் 20 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான வரைவு ஆண்டறிக்கை ஒரு சில திருத்தங்களுடன் ஏற்கப்பட்டது. நமது சங்கத்தை பொதுச் செயலர் தோழர் பி. அபிமன்யு இன்றைய நிலை குறித்து விரிவான உரை நிகழ்த்தினார்.
நமது மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழர்.கே. பழனிக்குமார் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார். ஈரோட்டில் நடக்க விருக்கும் மாநில மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரல் இறுதிப்படுத்தப்பட்டது. மாநில மாநாட்டிற்கான சார்பாளர் கட்டணம் ரூபாய் 300 என முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment