bsnleu

bsnleu

welcome

welcome

Tuesday, 23 May 2017

மே-23, தோழர்.எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள்...

சிறையில் கூடுகட்டிய குயில்-தோழர். M.R.V. நினைவு நாள்.
சரித்திரம்சிலரை எழுதுகிறது
சரித்திரத்தைசிலர் எழுதுகிறார்கள்
எம்.ஆர்.வி.!நீங்கள்இரண்டாம் ஜாதி
உன் முன்னோர்களின் வாழ்க்கை
கிளையைப் போல்மேலே உயர்ந்திருக்க
நீயோ -விழுதைப் போல்கீழே இறங்கி வந்தாய்.
நட்சத்திரங்களை ஸ்பரிசிக்க வேண்டிய
உன் விரல்கள்புழுதி மண்ணையே அளைந்தன.
கட்சியின் நிர்மாணத்தில்
நீஆழமாய் அமைந்தஅஸ்திவாரம் அல்லவா?
சுதந்திரத்திற்காக -
சிறையில்கூடு கட்டிக் கொண்டகுயில் நீ
கடைசிவரைக்கும்நீ சுவாசித்ததுகட்சிக்காகத்தான்
உனதுவக்கீல் தொழிலை
ஏன்கழற்றி எறிந்தாய்?
இனிமேல் அணிய வேண்டியது
கறுப்புக் கோட்டல்ல
சிவப்புக் - கோட்டு என்றுசித்தரிக்கவா?
நீவாதாட வேண்டியதுபொய் வழக்கல்ல
வர்க்க வழக்குக்கென்றுவரித்துக் கொண்டாயா?
துப்பாக்கிகள் உன்னைக்குறிபார்த்த போதும்
இயக்கத்தைத்தான் நீசரிபார்த்தாய்
.உன் ஒவ்வொரு சுவடும்ஒரு புதிய பாதை!
உன் ஒவ்வொரு சொல்லும்
ஒரு புதிய கீதை!நீ சொன்னதில்லை!
ஆனால் - உன்பூத உடம்பைக்குளிப்பாட்டும் போது
தானேஎத்தனை தழும்புகள் என்றுஎண்ணி முடித்தோம்!
உனக்கு சொர்க்கம் என்பதுவிண்ணில் இல்லை
அது -இன்னும் படைக்கப்படாமல்இங்கேதான் இருக்கிறது!
சோசலிச சொர்க்கம்படைப்போம்!
உன்ஞாபகதீபங்களின் வெளிச்சத்தில்...

No comments:

Post a Comment