அருமைத் தோழர்களே ! நமது BTL கிளையின் தலைவர் தோழர். k. மகாராஜன் அவர்களுக்கு பனி நிறைவு பாராட்டு விழா...கிளையின் சார்பாக அம்மையநாயக்கனூரில் மிக மிக சீரும் சிறப்புமாக தோழர் காசிராஜன் தலைமையில் நடந்தேறியது...
மாவட்டத்தலைவர் தோழர்.எ. பிச்சைக்கண்ணு , மாவட்ட செயலர் தோழர்.சி.செல்வின் சத்தியராஜ் இருவரும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். விழாவிற்கு கிளையின் பெருவாரியான தோழர்களும், தோழர்.கே. மகாராஜனின் ஏராளமான உறவினர்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
தோழர். k. மகாராஜன் உறவினர்கள் உட்பட, தோழர்கள், சின்னையன், ஜான் போர்ஜியா, தனபால், ரசாக் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினார்கள். மகாராஜன் ஏற்புரைக்குப்பின் தோழர். பெரிய சாமி நன்றியுரை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment