அருமைத் தோழர்களே ! நமது BSNLEU வதிலை கிளையில், இம் மே மாதம் இலாகா பனி நிறைவு பெரும் தோழர்கள் கே. மகாராஜன் மற்றும் கே. பழனியாண்டி ஆகியோரின் பனி நிறைவு பாராட்டு விழா 24.05.17 அன்று மிகவும் சீரும், சிறப்புமாக விமர்சியாக நடைபெற்றது. வதிலை கிளை செயலர் தோழர்.கே. சின்னையன் வந்திருந்த அனை வரையும் வரவேற்று பேசினார்.
பனி நிறைவு செய்யும் தோழர்களை பாராட்டியும், நமது நிறுவனம் குறித்த இன்றயை நிலைகுறித்தும், நமது சங்கம் எடுத்துவரும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக மாவட்ட செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் சிறப்புரை நிகழ்த்தினார். அதன்பின் தோழர்கள் எஸ். சூரியன், எஸ். ஜான் போர்ஜியா, மற்றும் மாவட்ட தலைவர் தோழர்.எ. பிச்சை கண்ணு, அப்துல் ரசாக், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக பொன்னம்மாள் நன்றியுரையுடன் பணிநிறைவு விழா இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment