போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணாததைக் கண்டித்து வரும் 15ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து சங்க கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டம் தொமுச பொருளாளர் நடராஜன் தலைமையில் வியாழனன்று (மே 4) சென்னை பல்லவன் சாலையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார்வரவேற்றார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம், ஏஐசிடியு சார்பில்லட்சுமணன், பாட்டாளி தொழிலாளர் சங்கம் சார்பில் முத்துக்குமார்,எச்.எம்.எஸ் சார்பில் ராஜாஸ்ரீதர், எம்எல்எப் சார்பில் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங் களின் தலைவர்கள் கோரிக்கைகள் குறித்தும் வேலை நிறுத்தம் குறித்தும் பேசினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அ.சவுந்தரராசன், “தமிழகஅரசுக்குச் சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 22,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெரு நகரங்களையும், குக்கிராமங்களையும் இணைக்கும் சிறப்பான சேவை மூலம் தமிழகத்தின் சமூகப்பொருளாதார வாழ்வில் போக்குவரத்துக் கழகங்களின் பங்கு பிரதானமாகும்” என்றார்.இலவச சேவைஅரசுப் பேருந்துகளில் தினமும் 35 லட்சம் மாணவர்கள் இலவச பயணம்செய்கின்றனர். முன்னாள், இந்நாள்சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், பத்திரிகை, ஊடகத் துறை செய்தியாளர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவர் தம் வாரிசுகள், தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள், மாற்றுத்திறனாளிகள், புற்று நோயாளிகள், நாடக கலைஞர்கள், எச்ஐவி நோயாளிகள் என பல லட்சம்பேர் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செய்கின்றனர்.அரசு அங்கீகாரம் பெற்ற தனியார்பள்ளிகள், தொழில்நுட்ப பயிலகங்கள், சமுதாயக் கல்லூரிகள் போன்ற பலருக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. சென்னை நகரத்தில் மூத்த குடிமக்கள் 3 லட்சம் பேருக்கு இலவச பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.சட்டவிரோத செலவுவருவாய் குறைவு என தெரிந்தும் மக்கள் நலனுக்காக சுமார் 12,000 நகரப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கி வருகின்றன. இதனால் ஏற்படும் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி, கூட்டுறவு நிறுவன கடன்,எல்ஐசி, அஞ்சலக ஆயுள் காப்பீடு போன்றவற்றிற்கு சம்பளத்தில் பிடித்தம் செய்த பணம் சுமார் ரூ. 7,000 கோடியை கழகங்கள் சட்ட விரோதமாக செலவு செய்துள்ளன என்றார்.நெருக்கடியில் கழகங்கள்போக்குவரத்துக் கழகங்கள் சேவைத் துறை என்ற அடிப்படையில் அரசு போதுமான நிதி வழங்காததே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாகும். மாணவர்களின் இலவசப்பயணத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முழுமையாக அரசு வழங்குவதில்லை. கூடுதல் டீசல் விலையை ஈடுகட்ட அரசு ஒப்புக்கொண்ட தொகையை கூட முழுமையாக வழங்கவில்லை. அரசின் இதுபோன்ற தொடர் நடவடிக்கையின் காரணமாகவே கழகங்கள் பெரும் நெருக்கடியில் உள்ளதாக சவுந்தரராசன் கூறினார்.பேச்சுவார்த்தை தோல்விபோக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் 13ஆவது ஊதிய உயர்வுபேச்சுவார்த்தை நடத்தி 1.9.2016 முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். இந்தாண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டபேச்சுவார்த்தையின் போது, போக்குவரத்துக் கழகங்களில் இயக்க வருமானத்திற்கும்.
இயக்க செலவிற்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும், போக்குவரத்துக் கழகங்கள் தொழிலாளர்களிடம் பிடித்தம்செய்த பணத்தை உரிய அமைப்புகளிடம் வழங்க வேண்டும்.வயது கடந்த 70 விழுக்காடு பேருந்துகளை மாற்றம் செய்ய, தற்போது அவைகளை பராமரிக்கத் தேவையான தொகைகளை வழங்க வேண்டும், விடுப்பு ஒப்படைப்பு, நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும், திருமண முன் பணம், திருமணக் கடன்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும், தினக்கூலி, சேமப்பதியாளர் தின ஊதியத்தை ஒப்பந்தப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் நிதியில்லை என்றுகூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்து அரசிடம் உரிய நிதியைபெற்று ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமனெ வலியுறுத்தினோம். அமைச்சர் வரவில்லைஆனால் அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் வியாழக் கிழமை(மே 4) பேச்சுவார்த்தைக்கு அழைத் தது. போக்குவரத்து அமைச்சர் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் தொழிற்சங்கங் கள் கோரிய அடிப்படையில் போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பிரச்சனைக்கு உரிய தீர்வு இல்லாமல் பேச்சுவார்த்தை கண்துடைப்பு அடிப்படையில் நடைபெற்றது.
எனவே தொழிற்சங்கங்கள் சார்பில் அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.வாயிற்கூட்டம்தமிழகத்தின் மிக முக்கியமான சேவைத் துறையான போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்கவும் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கவும் வேலைநிறுத்தம் செய்ய வேண்டியநிர்ப்பந்தத்தை
அரசு உருவாக்கியுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 15ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்வது என கூட்டத்தில்தீர்மானித்துள்ளோம். வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர்களை ஆயத்தப்படுத்தும் அடிப்படையில் 9ஆம் தேதி அனைத்து மண்டல தலைமையகங்களிலும் வாயிற்கூட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மக்கள் சந்திப்பு இயக்கம்தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும், வேலைநிறுத்த போராட்டத்திற்கும் ஆதரவு கோரி 11, 12 தேதிகளில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது எனவும் கூட்டமைப்பின் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment