bsnleu

bsnleu

welcome

welcome

Wednesday 31 May 2017

மிருக வதை தடை சட்டத்தில் திருத்தம் செய்த அரசாணைக்கு இடைக்கால தடை: சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு...

மத்திய அரசின் மாட்டிறைச்சி விற்பனை தடை சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை இடைக்கல தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம். பொதுநல மனுக்களை விசாரித்த நீதிபதிகள் முரளிதன், கார்த்திகேயன் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மேலும், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கும் வகையில், விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால், மாட்டு இறைச்சி தொழிலில் ஈடுபட்டு வருவோரின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி, ஆசிக் இலாஹி பாபு ஆகியோர் பொர்துநல மனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள், "இந்தப் பிரச்சினை மத்திய - மாநில அரசுப் பட்டியலில் இருக்கிறது. அப்படியிருக்கும்போது மத்திய அரசு இதில் தன்னிச்சையாக ஆதிக்கம் செலுத்த முடியாது. எனவே மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது" எனத் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment