அருமைத் தோழர்களே ! 19/05/2017 காலை
10 மணி 25 நிமிடத்திற்கு ஈரோடு நகரில் நமது BSNLEU மாநில சங்கத்தின் 8 வது மாநாடு துவங்கியது. மாநாட்டு அரங்கத்தின் வாயிலில் தேசிய கொடியும் மற்றும் நமதுசங்க கொடியும் தோழர்களின் விண்ணதிர்ந்த கோஷங்களிடையே ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தியாகிகள் ஸ்தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
BSNLEU தமிழ் மாநில மாநாட்டில் கொடியேற்றும் நிகழ்ச்சி |
BSNLEU வின் தமிழ்மாநில மாநாட்டினை அகிலஇந்திய பொதுசெயலாளர் தோழர்.P.அபிமன்யு அவர்கள் துவக்கிவைத்து எழுச்சிமிகு உரையாற்றினார்.
நமது பொதுச் செயலர் தோழர்.பி.அபிமன்யு துவக்க உரை ... |
மாநில மாநாட்டில் பங்கு பெற்ற சார்பாளர்களில் ஒரு பகுதி.... |
மோடியின் கனவாம்-'டிஜிட்டல் இந்தியா'.அதற்கு அம்பானியின் சமர்பனமாம் 'ஜியோ' எனும் 1,50,000 கோடி முதலீட்டிலான திமிங்கலம். கையையும், கண்ணையும் கட்டிப்போட்டு விட்டு BSNL இவர்களோடு போட்டி போட்டு பிழைத்துகொள்ள ஆளும் வர்க்கம் சபித்துவிட்டது.இதை BSNL ஊழியர்களும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து எதிர்கொண்டனர். தெருத்தெருவாக சிம்கார்டு விற்பனை உட்பட சேவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிறுவன நஷ்டத்தை குறைத்தனர். லாபத்தை நோக்கி பயணிக்க உள்ளது .பொதுத்துறை பாதுகாப்பில் புது அத்தியாயம் படைத்த BSNLஊழியர் சங்க மாநில 8வது மாநாடு. ஈரோட்டில்...... ஊதியம், சலுகைகள் மீதான விவாதித்தைவிட 'தேசம் காக்க -பொதுத்துறை பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை மாநாடு முழுக்க கண்டேன். என சிஐடியூ சார்பாக தோழர் கருமலையான் வாழ்த்துக்களை தெரிவித்தார்...
No comments:
Post a Comment