bsnleu

bsnleu

welcome

welcome

Thursday, 4 May 2017

இத விட உசந்தது எதுவும் இல்ல . . .

இத விட உசந்தது எதுவும் இல்லஇத விட உசந்தது எதுவும் இல்லஎன்ற பெயரில் புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது
இதனை தமிழக BSNL முதன்மை பொதுமேலாளர் பூங்குழலி சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிஎஸ்என்எல் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 4 சதவீதம் வருவாய் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, தற்போது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் குறைந்தபட்ச வேகம் 4 எம்பிபிஎஸ் ஆக உயர்த்தப்படுகிறது. புதிய தரைவழி தொலைபேசி இணைப்பு, பிராட்பேண்ட் இணைப்பு பெறுபவர்களுக்கு நிர்மாணக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இத விட உசந்தது எதுவும் இல்லதிட்டத்தில் நான்கு வகையான அம்சங்களை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல்
எஸ்டிவி 333 ரூபாய் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3GB data வழங்கப்படுகிறது.
ரூ.349 ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் டாக்டைம் தினமும் 2 GB வேகக்கட்டுப்பாடின்றி 28 நாட்களுக்கு வழங்கப்படும்.
எஸ்டிவி 339 பூஸ்டர் மூலம் 28 நாள்களுக்கு தினமும் 3GB data மற்றும் பிஎஸ்என்எல்க்கு வரையறையின்றி பேசலாம். பிற நிறுவனத்தின் நெட்வொர்க்குகளுக்கு தினமும் 25 நிமிடம் இலவசமாகவும், பின்னர் நிமிடத்துக்கு 25 பைசா வீதமும் பேசலாம்.
எஸ்டிவி 395 ரீசார்ஜ் செய்து 71 நாள்களுக்கு பிஎஸ்என்எல் எண்களுக்கு 3 ஆயிரம் நிமிடங்களும் பின்னர் நிமிடத்துக்கு 20 பைசாவிலும் பேசலாம்.
இந்த சலுகைகளை பெற பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என பிஎஸ்என்எல் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment