பி.இ மற்றும் பி.டெக் படித்த இளைஞர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்ப ட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 6 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
வேலை – ஜூனியர் டெலிகாம் அதிகாரி
தகுதி – பி.இ, பி.டெக்
மொத்த காலியிங்கள் – 2510
சம்பளம் – ரூ 16,400 – 40,500 /
மாதம்
வேலை இடம் – இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி –
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பி.இ மற்றும் பி.டெக் பட்டப்படிப்பினை படித்திருக்க வேண்டும். பி.இ/பி.டெக் டெலிகாம், எலக்ட்ரானிக்ஸ், ரேடியோ, கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, இன்ஸ்ட்யூ மென்டேஷன் எஞ்ஜீனியரிங், அல்லது எம்.எஸ்.சி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் சி.எஸ், இ.சி, இ.இ, ஐ.என் ஆகிய கேட் ஆவணக் குறியீடுகளின் நான்கு துறைகளில் ஏதேனும் ஒரு பேப்பரில் 2017ம் ஆண்டிற்காக பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கேட் தேர்வினை எழுதியிருக்க வேண்டும். அதில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு –
18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை –
ஐஐடி ரூர்க்கியால் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட 2017ம் வருடத்திற்கான கேட் தேர்வை எழுதியர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம் –
விண்ணப்பக்கட்டணம் –
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500/- செலுத்த வேண்டும்.
SC & ST பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300/- செலுத்த வேண்டும். விண்ணப்பக்கட்டணத்தை நெட் பேங்க், டெபிட்கார்டு மற்றும் கிரேடிட் கார்டுகளை பயன்படுத்தி செலுத்தலாம்.விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 6ம் தேதிக்குள் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும்.
No comments:
Post a Comment