bsnleu

bsnleu

welcome

welcome

Sunday 2 April 2017

ஏப்ரல்-2, இன்று உலக ஆட்டிச தினம்

லக அளவில் ஆட்டிசம் எனும் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் 500 குழந்தைகளுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆட்டிசம் பாதிப்பு இருக்கலாம் என்று தோராயமாக கணக்கிடப்படுகிறது. இக்குறைபாடு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் இன்னமும் நிறையக் குழந்தைகள் கண்டறியப்படாமல் இருக்கலாம். எனவே உண்மை நிலவரம் இதை விடவும்கூடுதலாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் 68 குழந்தைகளுக்கு ஒருவர் ஆட்டிசம் உடையவராகக் கண்டறியப்படுகிறார். வெகு வேகமாக அதிகரிக்கும் இந்த எண்ணிக்கையை எதிர்கொள்ள முதலில் இக்குறைபாடு குறித்த விழிப்புணர்வை நம் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். ஆட்டிசம் குறித்த சில அடிப்படைகளை தெரிந்து கொள்வது அதற்கு உதவும்.
ஆட்டிசம் என்றால் என்ன?
இது நரம்பியல் சார்ந்த ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிச நிலையாளர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன் (Communication), சமூகத்தில் கலந்து பழகும் திறன்(Socialization) போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். மேலும் ஒரே மாதிரியான விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வதில் பேரார்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இது ஒரு குடைச் சொல் (spectrum disorder) - இதில் பரவலான வளர்ச்சிக் குறைபாடு, ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் என பல்வேறு வகைகள் உண்டு. இக்குறைபாட்டின் பாதிப்பு - தீவிரத்தன்மையிலும்(severity) வேறுபாடுகள் உண்டு.
ஆட்டிசம் ஒரு ஒட்டிக் கொள்ளும் நோயா?
ஆட்டிசம் ஒரு நோயல்ல. அது ஒருகுறைபாடு மட்டுமே. மேலும் அது ஒரு
வரிடமிருந்து மற்றவருக்கு பரவ வாய்ப்பே இல்லை. ஆட்டிச நிலைக்குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு இதரக் குழந்தைகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களுடன் கலந்து பழகுவதாலும், சேர்ந்து விளையாடுவது, படிப்பதுபோன்ற செயல்களாலும் (peer group
interactionn)ஆட்டிசநிலைக்குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும். இதற்கு இதரக்குழந்தைகளின் பெற்றோர்ஆட்டிசம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அடையாளம் காண்பது எப்படி?
ஆட்டிசத்திற்கு மருத்துவ ரீதியான பரிசோதனைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே குழந்தையின் நடவடிக்கைகளை கூர்ந்துகவனிக்கும் பெற்றோர், உறவினர், ஆசிரியர்கள் ஆகியோரே இக்குறைபாட்டை கண்டறிய வேண்டும். கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒரு சில உங்கள் குழந்தையிடம் தென்படுவதாகத் தோன்றினால் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. அல்லது சென்னை முட்டுக்காட்டில் அமைந்துள்ளநிப்மெட்(NIPMED) நிறுவனத்திற்குச் சென்றால் குறைந்த செலவில்/இலவசமாக முழுமையான பரிசோதனைகளைச் செய்து கொள்ளவும் முடியும்,
1. சக வயதுக் குழந்தைகளோடு கலந்துவிளையாடாமல் ஒதுங்கி இருப்பது
2. கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பது.
3. பாவனை விளையாட்டுக்களில் ஆர்வமில்லாமல் இருப்பது. அல்லது ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்வது.
4.தினசரி செயல் பாடுகளில் மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அப்படியேதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளாமல் அழுது அடம் பிடிப்பது.
5. தனக்கு தேவையான பொருட்களை விரல் நீட்டி சுட்டாமல், பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.
6.சுழலும் பொருட்கள் மீதான ஆர்வம்.
7. பொருட்களை உரிய முறையில்
கையாளாமல் வித்தியாசமாக பயன் படுத்துவது. ஒரு கார் பொம்மையைத் தந்தால் அதை ஓடவிட்டுப் பார்க்காமல், கவிழ்த்துப்போட்டு அதன் சக்கரத்தை சுழல விடுவது.
8. பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருத்தல், சில வேளைகளில் காது கேட்கவில்லையோ என்று தோன்றும்.
9. பயம், ஆபத்து போன்றவற்றை உணராது இருப்பது.
10. சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது.
இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
இக்குறைபாட்டின் தன்மை, தீவிரம்முதலியவை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும் என்பதால் நிபுணர்களின் பரிசோதனைக்குப் பின்னரே குழந்தைகளுக்கான சிகிச்சைகள் (தெரப்பி) தீர்மானிக்கப்பட வேண்டும். பொதுவாக வாழ்வியல் செயல்களைப் பயிற்றுவிக்கவும், சென்சரி சிக்கல்களைத் தீர்க்கவும் ஆக்குபேஷனல் தெரபி(Occupational Therapy) முக்கியமாக தேவைப்படும். மேலும் குழந்தைகளின் தேவையைப் பொறுத்து பேச்சுப் பயிற்சி (Speech Therapy), சிறப்புக் கல்வி முதலிய பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.
ஆட்டிச பாதிப்புள்ளவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காதா?
இது ஒரு தவறான கருத்தாகும். ஆட்டிசக் குழந்தைகள் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதில் ஒரு குறையும் இருக்காது. ஆனால் பேச்சு, தகவல் தொடர்பு போன்ற திறன் குறைவாக இருப்பதால் அன்பை வெளிக்காட்டும் விதம் நமக்கு புரியும்படியாக இல்லாமல் போகலாம்.
ஆட்டிசத்தை முற்றிலுமாக குணப்படுத்த வழியுள்ளதா?
ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடு. எப்படி மனித உடலுக்கு சர்க்கரை குறைபாடு வந்தாலோ, இரத்தக்கொதிப்பு குறைபாடு வந்தாலோ 100 சதவீதம் குணப்படுத்த முடியாதோ, அதுபோலத்தான் ஆட்டிசமும். ஆனா லும் ஆட்டிசத்தின் பாதிப்புக்குள்ளான வர்களை தொடர் பயிற்சியின் மூலம் சராசரிக்கு நிகரான வாழ்வை வாழச் செய்ய முடியும். இன்று வரை உலகளவில் இக்குறைபாட்டை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகள் எதுவும் ஆய்வு பூர்வமாக கண்டறியப்படவில்லை. போலியான விளம்பரங்களை நம்பி நேரம், பணம், குழந்தைகளின் உடல்நலம் போன்றவற்றை இழப்பது தேவையற்றது.- எஸ். பாலபாரதி...நன்றி ---தீக்கதிர்.



No comments:

Post a Comment