இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து கோப்பையை வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரினை தோற்கடித்தார்.தில்லியில், இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடந்து வந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகத் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்தியாவின் சிந்து, ‘நம்பர்-3’ வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் மோதினர். முதல் செட்டை 21-19 என சிந்து கைப்பற்றினார். சொந்த மண்ணில் ரசிகர்கள் முன் தொடர்ந்து அசத்திய சிந்து, அடுத்த செட்டையும் 21-16 என தன்வசப்படுத்தினார். 47 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், சிந்து 21-19, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தவிர இது, சிந்துவின் முதல் சூப்பர் சீரிஸ் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது, சிந்து வென்ற 9வது பட்டம் ஆகும்.... அவருக்கு நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment