அருமைத் தோழர்களே ! கடந்த 20-04-17 அன்று மதுரை GM அலுவலக BSNLEU கிளைக்கூட்டம், கிளைத்த தலைவர் தோழர்.வி .சுப்புராயலு தலைமையில் நடைபெற்றது . கிளைக்கூட்டத்தில் செயலர் என். ஈஸ்வரி தனது கிளை செயலர் பொறுப்பை தொடர இயலாத காரணத்தால், பொதுக்குழுவில் புதிய கிளை பொறுப்புச்செயலராக தோழர்.ஜி.மனோகரன் அவர்களை தேர்வு செய்ய வேண்டி தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை தோழர் கே.ஆர். ஏகநாத் வழிமொழிந்தார். தலைவர் தீர்மானத்தை அவை ஒப்புதலுக்கு வைத்த போது கிளைக்கூட்டம் , ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் தோழர் ஜி. மனோகரன் புதிய பொறுப்பு கிளைச் செயலராக தேர்வு செய்யப்பட்டதாக தலைவர் அறிவித்தார். கிளைக்கூட்டத்தில் தோழர்கள் C.செல்வின் சத்தியராஜ் -D.S , A. பிச்சைக்கண்ணு -D.P, மற்றும் S. சூரியன், EX.D.S ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக புதிய செயலர் தோழர்.ஜி. மனோகரன் நன்றி கூற கிளைக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment