bsnleu

bsnleu

welcome

welcome

Tuesday, 25 April 2017

ரயில்வேத் தொழிலாளர் தலைவர் ஆர்.ராமசாமி காலமானார். . .

ரயில்வேத் தொழிலாளர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.ராமசாமி (24ஆம்தேதி) திங்கள்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) மத்திய சங்கத்தின் உபதலைவராகவும், மதுரை கோட்ட தலைவராகவும் அவர் பல்லாண்டு காலம் பணியாற்றியுள்ளார்.ரயில்வேத் தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளார். அதற்காக வேலைநீக்கம், ஊதிய உயர்வு முடக்கம் என பல தண்டனைகளைப் பெற்றுள்ளார். 1974ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வேத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின்போது ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கே.அனந்த நம்பியார், எம்.கல்யாணசுந்தரம், ஆர்.உமாநாத், டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட தொழிலாளர் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டவர். 1981ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தினமும் டிஆர் இயு அலுவலகத்திற்கு வந்து இயக்கப் பணிகளுக்கு தொடர்ந்து உதவி செய்தார்.
தோழர்ஜி..ராமகிருஷ்ணன் இரங்கல்
தோழர் ஆர்.ராமசாமி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில்வே தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் அவரது பங்கு என்றென்றும் நினைவு கூரப்படும் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்கள் அஞ்சலி
மதுரை தபால் தந்தி நகர், கலை நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் ராமசாமியின் உடலுக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பரமேசுவரன், இரா.ஜோதிராம், இரா.அண்ணாதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் டிஆர்இயு நிர்வாகிகள் சங்கர ராமன், கல்யாணசுந்தரம், திருமலை ஐயப்பன், நெடுமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.இறுதி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இரா. நாராயணன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ. பெருமாள், மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன்,மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜெயசந்திரன் ஆகியோர் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்திப் பேசினர். நமது BSNLEU  சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட செயலர் தோழர்.சி.செல்வின் சத்தியராஜ், எம். சௌந்தர், மற்றும் எஸ். சூரியன் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment