அருமைத் தோழர்களே ! 23-04-17 ஞாயிறு அன்று மதுரை AIBSNLEA மாவட்ட சங்கத்தின் மாநாடு மிகவும் சிறப்பாக நடந்தேறியது. மாநாட்டிற்கு தோழர். ராய் தலைமைதாங்கினார். மாவட்டச் செயலர் தோழர்.என். சீனிவாசன் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.. மாநாட்டில் AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர்.சிவக்குமார், மாநில செயலர் தோழர் துரைஅரசன் , பகுதிச் செயலர் தோழர். காமராஜ் , அகில இந்திய அட்வைசர் தோழர்.வி.கே.பி , மற்றும் அனைத்து சங்கங்களின் சார்பாக மாவட்ட செயலர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். நமது BSNLEU சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் , முன்னாள் மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் ஆகியோரும் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.
நிறைவாக நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தோழர் அருணாச்சலம் புதிய மாவட்ட செயலர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் பனி சிறக்க நமது தோழமை பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
No comments:
Post a Comment