அருமைத் தோழர்களே ! , தொடர்ந்து வரலாறு படைத்து வரும், பெருமை மிகுந்த நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் சி. செல்வின் சத்தியராஜ் பேட்டிக்கு சென்றிருந்தபோது , மதுரை பொது மேலாளர் திருமதி.S.E. ராஜம், ITS அவர்கள் கேடரை சொல்லி அலட்சிய படுத்திய செயலை வன்மையாக கண்டிக்கும் விதமாக 6-4-17 அன்று மதியம் மதுரை G.M(O)-ல் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து பலநூறு தோழர், தோழியர்கள் மிக சக்தியாக கலந்துகொண்டனர்...
நடைபெற்ற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர். A. பிச்சைக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட உதவிச் செயலர் தோழர் K. பழனிக்குமார் பொருள் பொதிந்த விண்ணதிரும் கோஷங்களை எழுப்பியதோடு தனது கண்டன உரையையும் நிகழ்த்தினார்.
பிரச்சனைகளின் தீர்வில் பாரபட்ச போக்கும், மாவட்ட செயலரை இன்சல்ட் செய்த மதுரை பொது மேலாளர் திருமதி.S.E. ராஜம், ITS அவர்களின் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது என்ற ஆவேச கண்டனக்குரலை....தோழர்கள்
- எஸ். ஜான்போர்ஜியா , மாநில துணைத் தலைவர் - BSNLEU
- பி. சந்திரசேகர் , மாநில அமைப்பு செயலர் - BSNLEU
- டி .கே. சீனிவாசன் , மாவட்ட துணைத் தலைவர் - BSNLEU
- வி. சுப்புராயலு, மாவட்ட உதவிச் செயலர் - BSNLEU
- என். சோணை முத்து, மாவட்ட செயலர் -TNTCWU
- எஸ். சூரியன், BSNLEU முன்னாள் மாவட்ட ச் செயலர் , ஆகியோர் உரை நிகழ்த்த ...
முடிவு : மதுரை மாவட்ட பொதுமேலாளர் , நமது மாவட்ட செயலரை கேடரைச் சொல்லி அலட்சியப்படுத்திய செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், நமது உறுப்பினர்களின் நியாயமான பிரச்சனைகளை தாமதமின்றி தீர்த்து வைக்க வேண்டும் என்றும், பாரபட்ச போக்கு களையப்பட வேண்டும் எனவும் , மாவட்டத்தில் நிலவும் ரவுடிசத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் இல்லாவிடில் மதுரை G.M (O) ஸ்தம்பிக்கும் வகையில் 26-4-17 அன்று மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெறும் என்ற அறிவிப்போடு ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment