bsnleu
welcome
Saturday, 29 April 2017
Friday, 28 April 2017
Thursday, 27 April 2017
Wednesday, 26 April 2017
TMM-கிளைத்த தலைவர் பனி நிறைவு விழா...
அருமைத் தோழர்களே ! நமது BSNLEU திருமங்கலம் கிளையின் தலைவர் தோழர் நாகராஜ் அவர்கள் இந்த ஏப்ரல் -2017 பனி நிறைவு பெறுகிறார். அவருக்கு நமது மாவட்டத்தலைவர் தோழர்.எ. பிச்சைக்கண்னு, மாவட்டச் செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ், முன்னாள் மாவட்டச் செயலர் தோழர் எஸ். சூரியன் ஆகியோர் நேரில் சென்று கதராடை அனுவித்து பாராட்டினார். அவ்வமயம் மாவட்ட சங்க நிர்வாகி தோழர்.ஆர். சுப்புராஜ், கிளை செயலர் எம். கண்ணன், பொருளர் எ. நாகராஜ் மற்றும் கிருஷ்ண மூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கைக்காக -ஆதரவு போராட்டம்...
25-04-17 அன்று மதியம் 1 மணிக்கு மதுரை GM அலுவலகத்தில் BSNL அரங்கத்தில் உள்ள அனைத்து சங்கங்களின் சார்பாக விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ். சிவகுருநாதன் தலைமை தாங்கினார். அனைத்து சங்கங்களின் சார்பாக தோழர்கள் சி. செல்வின் சத்தியராஜ், எ. பிச்சைக்கண்ணு, அருணாச்சலம், கருப்பசாமி, முருகன். பாலகுமார், ராஜேந்திரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். 40 பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
Tuesday, 25 April 2017
தோழமை பூர்வமான வாழ்த்துக்கள் . . .
அருமைத் தோழர்களே ! 23-04-17 ஞாயிறு அன்று மதுரை AIBSNLEA மாவட்ட சங்கத்தின் மாநாடு மிகவும் சிறப்பாக நடந்தேறியது. மாநாட்டிற்கு தோழர். ராய் தலைமைதாங்கினார். மாவட்டச் செயலர் தோழர்.என். சீனிவாசன் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.. மாநாட்டில் AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர்.சிவக்குமார், மாநில செயலர் தோழர் துரைஅரசன் , பகுதிச் செயலர் தோழர். காமராஜ் , அகில இந்திய அட்வைசர் தோழர்.வி.கே.பி , மற்றும் அனைத்து சங்கங்களின் சார்பாக மாவட்ட செயலர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். நமது BSNLEU சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் , முன்னாள் மாவட்டச் செயலர் தோழர்.எஸ். சூரியன் ஆகியோரும் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.
நிறைவாக நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தோழர் அருணாச்சலம் புதிய மாவட்ட செயலர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் பனி சிறக்க நமது தோழமை பூர்வமான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அரசு ஊழியர் காலவரையற்ற வேலைநிறுத்தம் அரசின் மெத்தனத்தால் நிர்வாகம் முடங்குகிறது...
தமிழகம்
முழுவதும் 4.5லட்சம் அரசு ஊழியர்கள்
25-04-17 முதல் காலவரையற்ற வேலை
நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 64 அரசு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக மார்ச் 31-ம் தேதி அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இன்றைய தினம் விவசாயிகளை ஆதரித்து அனைத்து கட்சிகளும், நமது தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் மாநிலம் தழுவிய கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்ட போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், புதிய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அரசு ஊழியர்களின் போராட்டம் வெல்ல வேண்டுமென நமது BSNLEU சங்கம் போராட்ட வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றது.

25-04-17 மதியம் 1 மணிக்கு - விவசாயிகளுக்கு ஆதரவாக BSNL-லில் ஆர்ப்பாட்டம்...
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளைச் சந்திக்க மறுப்பதன் மூலம் அவர்களை பிரதமர் நரேந்திர மோடி அவமதிக்கிறார்
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்பட்ட விவசாயக் கடன்களை ரத்துச்செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரதமரைச் சந்திக்க அனுமதி கோரியும் தமிழக விவசாயிகள் குழுவினர் புதுதில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. ஒவ்வொரு நாளும் புதிய வடிவங்களில் அவர்கள் நடத்தும் போராட்டம் ஊடகங்களின் கவனத்தையும் மக்கள் கவனத்தையும் ஈர்த்தாலும், இதுவரையில் இவர்களோடு பேச பிரதமர் முன்வரவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை, ஏற்கத்தக்கவை. கார்ப்பரேட்டுகளுக்கு சென்ற ஆண்டு மட்டும் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் வரி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. பிறகு ஏன் விவசாயிகளின் அரசு வங்கிக் கடன்களை ரத்துச் செய்ய முடியாது, வெளிநாடுகளுக்குப் பறந்து போகிற
இடங்களில் சந்திக்கிறவர்களோடு செல்ஃபி படம் எடுத்துக்கொண்டு பதிவிடுகிற பிரதமரால் தலைநகரிலேயே போராடிக்கொண்டிருக்கிற தமிழக விவசாயிகளைச் சந்திக்க வரமுடியவில்லை. இதன் மூலம் விவசாயிகளை அவர் அவமதிக்கிறார். பாஜக தேர்தல் அறிக்கையிலேயே, விவசாய விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு வழக்குத் தாக்கல் செய்திருக்கிறது. உறுதியான, ஒன்றுபட்ட போராட்டமே இந்த அரசை அசையச் செய்யும் ....
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் 25-04-2017 மதியம் 1 மணி அளவில் BSNLEU,
NFTE, SNEA, AIBSNLEA, TEPU, FNTO, AIBSNLOA, TESA, SEWA மற்றும் அனைத்து சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அனைவரும் திரளாக கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ரயில்வேத் தொழிலாளர் தலைவர் ஆர்.ராமசாமி காலமானார். . .
ரயில்வேத் தொழிலாளர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.ராமசாமி (24ஆம்தேதி) திங்கள்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) மத்திய சங்கத்தின் உபதலைவராகவும், மதுரை கோட்ட தலைவராகவும் அவர் பல்லாண்டு காலம் பணியாற்றியுள்ளார்.ரயில்வேத் தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளார். அதற்காக வேலைநீக்கம், ஊதிய உயர்வு முடக்கம் என பல தண்டனைகளைப் பெற்றுள்ளார். 1974ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வேத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின்போது ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கே.அனந்த நம்பியார், எம்.கல்யாணசுந்தரம், ஆர்.உமாநாத், டி.கே.ரங்கராஜன் உள்ளிட்ட தொழிலாளர் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டவர். 1981ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் தினமும் டிஆர் இயு அலுவலகத்திற்கு வந்து இயக்கப் பணிகளுக்கு தொடர்ந்து உதவி செய்தார்.
தோழர்ஜி..ராமகிருஷ்ணன் இரங்கல்
தோழர் ஆர்.ராமசாமி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். ரயில்வே தொழிலாளர்களை அணிதிரட்டுவதில் அவரது பங்கு என்றென்றும் நினைவு கூரப்படும் என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்கள் அஞ்சலி
மதுரை தபால் தந்தி நகர், கலை நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் ராமசாமியின் உடலுக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலக்குழு உறுப்பினர்கள் வி.பரமேசுவரன், இரா.ஜோதிராம், இரா.அண்ணாதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.நன்மாறன், எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் டிஆர்இயு நிர்வாகிகள் சங்கர ராமன், கல்யாணசுந்தரம், திருமலை ஐயப்பன், நெடுமாறன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.இறுதி நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இரா. நாராயணன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ. பெருமாள், மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன்,மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜெயசந்திரன் ஆகியோர் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்திப் பேசினர். நமது BSNLEU சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட செயலர் தோழர்.சி.செல்வின் சத்தியராஜ், எம். சௌந்தர், மற்றும் எஸ். சூரியன் ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தாமிரபரணி சிவந்தது . . .
தாமிரபரணி நீரை பன்னாட்டு குளிர்பானக் கம்பெனிகள் எடுத்துக் கொள்ளலாம் எனத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் நேரில்வந்து தாமிரபரணி ஆற்றைப் பார்வையிட வேண்டும் என நெல்லையில் நடைபெற்ற தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத் பேசினார்.நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Sunday, 23 April 2017
Saturday, 22 April 2017
GPF வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிமேல் நேரடியாக பட்டுவாடா...
GPF வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிமேல் நேரடியாக DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்யப்படும் என...
CORPORATE அலுவலகம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் ESS எனப்படும் ONLINE மூலம் விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி அதனை ஒப்புதல் செய்து நேரடியாக DOTCELLக்கு E-MAIL மூலம் அனுப்பிவிடுவார். DOTCELL நேரடியாக ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வைப்புநிதியை வரவு வைத்துவிடும்.
இந்தப்பணி இரண்டு கட்டமாக அமுல்படுத்தப்படும். முதற்கட்டமாக ஏப்ரல் 2017க்குள் 12 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டமாக ஏனைய மாநிலங்களிலும் அமுல்படுத்தப்படும். தமிழகம் இரண்டாம் கட்ட அமுலாக்கத்தில் உள்ளது. வைப்புநிதி DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்வதன் மூலமாக ஊழியர்கள் விரைவாக பட்டுவாடா பெறமுடியும்.
நமது BSNLEU மத்திய சங்க செய்திகள்..
DoT, GPF பட்டுவாடா பணியை தன் வசம் எடுத்து கொண்டு விட்டது. 18.04.2017 உத்தரவுப்படி, முதல் திட்டத்தில், 12 மாநிலங்களின் பட்டுவாடா DoT யால் செய்யப்படும். இரண்டாவது திட்டத்தில், நமது தமிழ் மாநிலம் உட்பட, எஞ்சியுள்ள மாநிலங்களின் பட்டுவாடா DoT வசம் சென்று விடும். இந்த நடவடிக்கையின் மூலம், GPF பட்டுவாடாவில் ஏற்படும் கால தாமதம் போக்கப்படும் என நம்பூகிறோம். இதன் மூலம் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
பத்தாம் வகுப்பு கல்வி தகுதி பெறாத ATT (பழைய RM, Group
D) தோழர்கள் Telecom Technician (பழைய TM) பதவி உயர்வு தேர்வு எழுத, ஒரு முறை கல்வி தகுதி நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, நேற்று, 18.04.2017 நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, மனித வள இயக்குனர் திருமதி. சுஜாதா T. ராய் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினார். நமது சங்கத்தின் ஆழமான, அழுத்தமான, நியாயமான வாதத்தின் அடிப்படையில், கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக மனித வள இயக்குனர் உறுதி அளித்துள்ளார்.
சில Sr.TOA தோழர்களின் சம்பள விகிதம் 7100-200-10100 என்ற விகிதத்திலிருந்து, 6550-185-9325 என்ற விகிதத்திற்கு NEPP திட்டம் காரணமாக மாற்றப்பட்டது. சம்பள குறைவு இல்லை என்று சொன்னாலும், சம்பள விகித குறைவு அந்த தோழர்கள் மத்தியில் மனச்சோர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்த அநீதியை களைய, நமது சங்கம் பல முறை நிர்வாகத்தை சந்தித்து பேசியது. பல போராட்டங்களில், இந்த விஷயமும் ஒரு கோரிக்கையாக இருந்தது. தற்போது, நமது கோரிக்கையை நிறைவேற்ற, சாத்தியமான வழிகளை ஆராய, அமுல்படுத்த நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. கோரிக்கை வெற்றி பெறும் வரை நமது சங்கம் தொடர்ந்து போராடும்.
பதவிகள் பெயர் மாற்ற கமிட்டி கூட்டம் நேற்று, (18.04.2017) நடைபெற்றது. எஞ்சியுள்ள சில கேடர்களின் பெயர்களை மாற்ற, கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. நிர்வாக குழு ஒப்புதலுக்கு பின், உத்தரவு வெளியிடப்படும். அடுத்த கூட்டம், 26.06.2017 அன்று நடைபெறும்.

20-04-17 மதுரை GM அலுவலக BSNLEU கிளைக்கூட்டம்
அருமைத் தோழர்களே ! கடந்த 20-04-17 அன்று மதுரை GM அலுவலக BSNLEU கிளைக்கூட்டம், கிளைத்த தலைவர் தோழர்.வி .சுப்புராயலு தலைமையில் நடைபெற்றது . கிளைக்கூட்டத்தில் செயலர் என். ஈஸ்வரி தனது கிளை செயலர் பொறுப்பை தொடர இயலாத காரணத்தால், பொதுக்குழுவில் புதிய கிளை பொறுப்புச்செயலராக தோழர்.ஜி.மனோகரன் அவர்களை தேர்வு செய்ய வேண்டி தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை தோழர் கே.ஆர். ஏகநாத் வழிமொழிந்தார். தலைவர் தீர்மானத்தை அவை ஒப்புதலுக்கு வைத்த போது கிளைக்கூட்டம் , ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் தோழர் ஜி. மனோகரன் புதிய பொறுப்பு கிளைச் செயலராக தேர்வு செய்யப்பட்டதாக தலைவர் அறிவித்தார். கிளைக்கூட்டத்தில் தோழர்கள் C.செல்வின் சத்தியராஜ் -D.S , A. பிச்சைக்கண்ணு -D.P, மற்றும் S. சூரியன், EX.D.S ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள் இறுதியாக புதிய செயலர் தோழர்.ஜி. மனோகரன் நன்றி கூற கிளைக்கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தொழிலாளர் விரோத சட்டங்களை வங்கக் கடலில் தூக்கி எறிவோம்!
மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் ஆவேசம்
தொழிலாளர் விரோத சட்டங்களை வங்கக்கடலில் தூக்கி எறிவோம் என்று மாநிலங்களவையில் பேசிய டி.கே.ரங்கராஜன் குறிப்பிட்டார்.தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான திருத்த மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில் கூறியதாவது:
அவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த மசோதாவை எதிர்த்துள்ளனர். நானும் அவர்களோடு இணைந்து கொள்கிறேன். இந்த மசோதா முற்றிலும் தொழிலாளர்களுக்கு எதிரானதாகும். அமைச்சர் ஓய்வு பெற்ற பிறகு இத்தகைய மசோதாவை கொண்டு வந்ததற்காக வருத்தப்படுவார். அடுத்த தலைமுறையையும் இந்த மசோதா பாதிக்கும்.இந்திய தொழிற்சங்க வரலாற்றை படித்துப் பார்க்குமாறு உறுப்பினர்களை நான் வேண்டிக் கொள்கிறேன். தொழிலாளர்களுக்கு கிடைத்த எந்தவொரு சலுகையும் அரசின் கருணையால் கிடைத்ததல்ல. மும்பை, கோவை ஆகிய மாநகரங்களின் தொழிற்சங்க வரலாறு ஆனாலும் சரி, ரயில்வே தொழிலாளர்களின் போராட்ட மானாலும் சரி தொழிலாளர்களின் தியாகத்தால்தான் உரிமைகள் கிடைத்துள்ளன. பொன்மலையில் நடந்த ரயில்வே தொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். கோவையில் 4 பஞ்சாலை தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்டனர். முதல் ஊதியக் குழு வந்த பின்னணியில் நடைபெற்ற போராட்டங்கள் இவை. ஒவ்வொரு சலுகையையும் தொழிலாளர்கள் போராடித்தான் பெற்றுள்ளனர்.
19 வயது முதல் தொழிற்சங்க ஊழியராக பணியாற்றி வருகிறேன். சர்க்கரை, சிமெண்ட், ஜவுளி, பெல், ரயில்வே மற்றும் ஆயுத தொழிற்சாலை தொழிலாளர்களுக்காக உழைத்து வந்துள்ளேன். அவர்களது நிலை யை நான் முற்றாக அறிவேன். அவர்களுக்காக நடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நான் பங்கேற்று ள்ளேன். ஒரு ரூபாய் பெறுவது கூட எளிதான காரியமல்ல. கடுமை யான போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும். இதற்காக பல தொழிலா ளர்கள் வேலைகளை இழந்துள்ளனர்.தொழிலாளர்கள் போராடி ஒன்றை பெற்றால் வேறுவழியில் அதை அபகரித்துக் கொள்வார்கள். ஓவர் டைம் அதிகரிக்கிறது என்றால் என்ன பொருள்? தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது என்பதுதான். இதனால் பலனடைவது யார்? தொழிற்சங்க இயக்கம் நாளுக்கு நாள் பலவீனமடைகிறது என்று சிலர் கூறுகின்றனர்.
அரசை நான் எச்சரிக்க விரும்புகிறேன். இந்திய தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் எழுவார்கள். தொழிலாளர்களுக்கு விரோதமான அனைத்து சட்டங் களையும் அவர்கள் வங்கக் கடலில் தூக்கி எறிவார்கள். இத்தகைய தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங் கள் ஏற்கெனவே உள்ள கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறிக்க முயல்கின்றன.ஐஎல்ஓ குறித்து அமைச்சர் பேசுகிறார். ஐஎல்ஓ அமைப்பின் அனைத்து தீர்மானங்களையும் இந்த அரசு ஏற்கிறதா? ஆனால் 125 மணிநேரம் ஓவர் டைம் என்பதை மட்டும்குறிப்பிடுகிறீர்கள். இந்திய தொழிலாளி பிரிட்டிஷ், ஜெர்மன் தொழிலாளர் களிடமிருந்து வேறுபட்டவர்கள். இந்த சட்டத் திருத்தத்தால் தொழிலாளர்களும் அனைத்து பொதுமக்களும் அவர்களது குடும்பங்களும் எதிர்காலத்தில் பாதிக்கப்படும். எனவே இந்த மசோதாவை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். சுதந்திர போராட்டத்தின் மூலமும், அதன் பின்னரும் தொழிலாளர்களுக்கு கிடைத்த சலுகைகளை பறிக்க இந்த அரசு முயல்கிறது. இது முற்றிலும் தவறு. இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.

Subscribe to:
Posts (Atom)