புதுதில்லி, ஜூலை 28-
பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தின்கீழ் இயங்கும் சங்கங்கள் இணைத்து விடுத்திருந்த வியாழன் ஒருநாள் வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றுள்ளது.
2017 ஜனவரி 1 முதல் ஊதியத் திருத்தம், ஓய்வூதியத் திருத்தம், நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டு ஓய்வுபெற்றுள்ள ஊழியர்களுக்கு ஓய்வுகாலப் பயன்கள் முதலியவற்றிற்காகவும் பிஎஸ்என்எல் சங்கங்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை நிறுத்தக்கோரியும் இவ்வேலைநிறுத்தம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள செய்திகளின்படி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள், நிர்வாக அலுவலகங்கள், தொலைபேசி இணைப்பகங்கள் முற்றிலுமாக செயல்படாமல் வெறுமனே காட்சியளித்துள்ளன. வேலைநிறுத்தம் எதிர்பார்த்ததைவிட சக்தியாக வெற்றிபெற்றுள்ளது. அலுவலகங்கள் முன்நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் அலுவலர்களும், ஊழியர்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
பிஎஸ்என்எல் அலுவலர்கள்-ஊழியர்களின் ஒருநாள் வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதிலிருந்தாவது அரசாங்கமும், நிர்வாகமும் படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி,
சுமுக தீர்வுகாண முன்வரவேண்டும். இல்லையேல்,
காலவரையற்ற வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்கள் தீவிரமாகும் என்று பிஎஸ்என்எல் அலுவலர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கன்வீனர் பி.அபிமன்யு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment