bsnleu

bsnleu

welcome

welcome

Wednesday 5 July 2017

மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகளை குறைக்காதே: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

குறைந்தபட்சம் ஊதியம் 26 ஆயிரம் வழங்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காதே, ஊழியர்களின் வீட்டுவாடகைப் படி உள்ளிட்ட சலுகைகளை குறைக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாயன்று (ஜூலை 4) சாஸ்திரி பவன் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சாம்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன், தபால் கணக்கு மாநிலச் செயலாளர் ஆர்.பி.சுரேஷ், மாநிலச் செயலாளர் எஸ்.பாலசுந்தரம், ஜெயகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி உள்ளிட்ட படிகளை மாற்றி அமைக்கிறேன் என்ற பெயரில் ஜூன் 29ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டார்கள்.
அதில் ஏற்கனவே நாங்கள் வாங்கிக் கொண்டிருந்த 30 விழுக்காடு வீட்டு வாடகைப் படியை 24 விழுக்காடாக குறைத்துவிட்டார்கள். அதேபோல் மற்ற எந்தப் படிகளையும் மாற்றி அறிவிக்கவில்லை.2015ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி 7வது சம்பளக் கமிஷன் தனது அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியது. வெறும் வீட்டு வாடகைப்படி 24 விழுக்காடு மட்டுமே அதில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அப்போது சம்மேளனம் சார்பில் நாங்கள் ஏற்கனவே 30 விழுக்காடு வாங்கிக் கொண்டிருக்கிறோம், எனவே 24 விழுக்காடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறினோம். உடனே அதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து அதே பழைய அறிக்கையை அப்படியே அந்த கமிட்டி மீண்டும் பரிந்துரை செய்துள்ளது.
இப்படி 24 விழுக்காடுதான் வழங்கப்படும் என்றால் அதற்கு ஒரு கமிட்டி போட்டு ஊழியர்களை ஏமாற்ற வேண்டியதில்லை.1.1.2016 முதல் ஊதியம், 1.7.2017இல் இருந்து அதற்கான படிகள் வழங்கப்படும் என்று கூறுவது எந்த நாட்டிலும் நடைமுறையில் இல்லாத ஒன்று. எனவே மத்திய அரசு ஊழியர்கள் இதை ஏற்கமாட்டார்கள். இதை எதிர்த்து நாடுமுழுவதும் போராட்டம் நடத்துவது என்று திட்டமிட்டிருக்கிறோம். உடனடியாக அரசு வீட்டுவாடகைப்படி உள்ளிட்ட படிகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ள கூட்டமைப்பின் கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு செல்வது குறித்து ஆலோசிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். . . .நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment