bsnleu

bsnleu

welcome

welcome

Monday, 17 July 2017

ஜூலை 17 தோழர் பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவு நாள்

தொழிலாளி வர்க்கத்தின் முன்ன ணிப் படை என்று கூறப்படும் வர்க்கக் கட்சிக்கு ஸ்தாபனம் என்றழைக்கப்படும் கட்சி அமைப்பு, மூளையும், முதுகெலும்புமாகும். முதலாளித்துவச் சுரண்டல் முறையினால் அவதிப்படும் தொழிலாளி வர்க்கம், தன் உரிமை காக்க, தன் நலன் காக்க பெற்றிருக்கும் ஒரே கருவி, கட்சி அமைப்பு என்பது தான். எனவே கட்சி அமைப்பை உருவாக்குவது, பாதுகாப்பது, பலப்படுத்துவது என்பது கம்யூனிஸ்ட்களின் தலையாய பணியாகும்.தோழர் பி.ஆர். பரமேஸ்வரன் இப்பணி யில் பிறருக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.
கட்சிக் கிளைகள் என்பவை கட்சியின்அடித்தளமாகும். அவை எந்தளவு பலமாயிருக் கின்றனவோ அந்தளவிற்குத்தான் கட்சியும் வலு வாக இருக்க முடியுமென்ற நியதியைப் பின்பற்றிய தோழர் பரமேஸ்வரன், ஒன்றாயிருந்த கட்சியிலும், பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதற்காக அல்லும் பகலும் பாடுபட்டார்.பி.ஆர்.பிக்கு வரலாறு குறித்த ஆழ்ந்த ஞானம்உண்டு. தத்துவ வரலாறு, இந்தியத் தத்துவம், உலகதத்துவ வரலாறுகள் குறித்து அவர் விளக்கும் பொழுது அற்புதமாக இருக்கும் . இவை குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் பரந்த அடிப்படை யைக் கொண்டிருக்கும் என மாதர் சங்கத் தலைவர் மைதிலி சிவராமன் நினைவுபடுத்துகிறார். "கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள், கட்சியின் சர்வதேச மற்றும் தத்துவார்த்த நிலைபாடுகள் குறித்து சரிவர புரிந்து கொள்ளாமல் விமர்சிப்பதுண்டு.
அச்சமயங்களில் பி.ஆர்.பி. அவர்களு டைய நிர்ணயிப்பு சரியற்றது என்பதை சுட்டிக்காண்பிப்பார். அவர்கள் புதிதாக கட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பதை கண்ணியமாக சுட்டிக்காட்டி அவர்கள் சோர்ந்து போகாவண்ணம் விளக்கம் கொடுத்து சரியான வழியை எடுத்துக் கூறுவார்" என்றும் மைதிலி மேலும் கூறுகிறார்.கட்சியின் சாதாரண உறுப்பினராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கிய பரமேஸ்வரன் ஒன்றாகயிருந்த கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அளவுக்கு உயர்ந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்டக்குழு உறுப்பினராகவும் மாவட்டச் செய லாளராகவும் மாநிலக் குழு உறுப்பினர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினராகவும் ஆனார். தன் இறுதிக்காலம் வரை செயற்குழு உறுப்பினராகத் தொடர்ந்து இருந்தார். 1984 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக்கப்பட்ட அவர் 1988ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் தொடர்ந்து செயல்பட்டார்.
பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அதிலிருந்து விடுபட்டார்.‘‘கட்சி அமைப்புப் பணிகளில் தனித்திறமை, விடா முயற்சி, மிக நுட்பமான காரியங்களைக் கூட கவனிக்கும் நுட்பம் போன்றவை அவரது அமைப்புத் திறமைக்கு அடிப்படையான ஒன்றாக அமைந்தது. கட்சி அமைப்பையும், அரசியலை யும், அடிப்படைத் தத்துவத்தையும் இணைத்து செயலாற்றியதுதான் அவர் புரிந்த சாதனைகளுக்கு ஆதாரமாக அமைந்தது’’."தத்துவார்த்தப் பிரச்சனைகளில் கட்சியைத் தொடர்ந்து ஈடுபடுத்தி வந்த தமிழ்நாட்டின்கட்சித் தலைவர்களில் தோழர் பி.ஆர்.பி. முன்னணியில் இருந்தார். தமிழ் மொழியில், மார்க் சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழை வெளிக் கொண்டுவருவதில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு மார்க்சிஸ்ட் தத்துவம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்த அவரது உயிரோட்டமான உறுதிப்பாட்டினை விவரிப்பதாக அமைந்திருந்தது".
"1967-75 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தோழர் வி.பி. சிந்தனும், தோழர் பி.ஆர்.பியும், இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றுசெயல்பட்டு சென்னையில் கம்யூனிஸ்ட் இயக்கம்முன்னேற வழி வகுத்தனர். கம்யூனிஸ்ட் தொழிற் சங்கம் தோன்ற முடியாத தொழிற்கூடங்களுக்குள் ஊடுருவி ஒரு பரந்துபட்ட தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க தோழர் வி.பி.சி.அரும்பாடு பாட்டார். அத்தகைய நேரத்தில் அவருக்கு உற்றதுணையாகவிருந்து, எழுச்சிமிக்க அந்தத் தொழி லாளிகளிடையேயிருந்து முக்கிய ஊழியர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈர்த்து கட்சி அமைப்பைக் கட்டியதில் தோழர் பி.ஆர்.பி.யின் பங்கு மிகப் பெரியது".தீக்கதிர்.

No comments:

Post a Comment