அருமைத் தோழர்களே ! பொதுத்துறை
ஊழியர்களுக்கான மூன்றாவது ஊதிய மாற்றத்தை பிஎஸ்என்எல்
ஊழியர்கள், அதிகாரிகளுக்கு அமலாக்க வலியுறுத்தி வியாழனன்று
பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்யும் அதிகாரிகள்,
ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் பெற
முடியாதபடி மத்திய அரசு செயலாளர்கள்
குழுவின் பரிந்துரை முட்டுக்கட்டையாக உள்ளது. எனவே பிஎஸ்என்எல்
நிறுவனத்துக்கு விலக்கு அளித்து, ஊதிய
மாற்றத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பிஎஸ்என்எல்
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள்
இணைந்து வியாழக்கிழமை 27-07-17 ஒரு நாள் வேலைநிறுத்தப்
போராட்டத்தை அகில இந்திய அளவில் அறிவித்தன.
இதன்ஒருபகுதியாக, மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பிஎஸ்என்எல் அலுவலகங்களிலும்
அதிகாரிகள், 27-07-17 அன்று ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மதுரை லெவல்-4 வளாகத்தில் உள்ள பிஎஸ்என்எல்
அலுவலக வளாகத்தில் கோரிக்கை
விளக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவிச் செயலர், தோழர். ஜி.சந்திரமோகன், SNEA சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர். விஜயகுமார் ஆகியோர் கூட்டுத் தலைமை பொறுப்பேற்றனர். BSNLEU மாவட்டச்செயலர், தோழர்.சி.செல்வின் சத்தியராஜ், மாவட்ட நிர்வாகிகள் கே.என். செல்வம், என்.. செல்வம், SNEA சார்பாக மாவட்டச் செயலர். தோழர். நாகராஜ், மாநில உதவிச் செயலர் தோழர். அழகர்சாமி, விஜயகுமார், TNTCWU மாவட்டச் செயலர் தோழர்.என். சோணைமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இறுதியாக தோழர் அழகுபாண்டிய ராஜா நன்றி கூறினார். இப்போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment