bsnleu

bsnleu

welcome

welcome

Sunday, 9 July 2017

BSNL உழைக்கும் பெண்கள் அகில இந்திய மாநாடு . . .

அருமைத் தோழர்களே! நமது BSNLEU சங்கத்தின்  அகில இந்திய BSNLஉழைக்கும் மகளிர் கருத்தரங்கம் ஹைதராபாத்தில், நமது அகில இந்திய தலைவர் தோழர்.பல்பீர் சிங் தலைமையில் மிக  உற்சாகமாக நடைபெற்றது. நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும்  பெண் ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள், மாநாட்டின் தொடர் நிகழ்சிகளை, BSNLEU-CHQ அமைப்புச்செயலர்,தோழியர் சுனித் சௌத்திரி, கேரள மாநிலத்திலிருந்து தோழியர். பாக்கியலட்சுமி, கொல்கொத்தாவைச் சேர்ந்த தோழியர்.சர்மிளா தத்தா, நமது தமிழகத்தைச் சேர்ந்த தோழியர்.பிரேமா மற்றும் ஹைதராபாத் சேர்ந்த தோழியர்.பத்மாவதி ஆகியோர் கூட்டுத் தலைமை பெறுப்பேற்று நடத்தினர். 
     கருத்தரங்கிற்கு வந்திருந்த  அனைவரையையும் வரவேற்று வரவேற்புக்குழு செயலர் தோழர்.சம்பத்ராவ் உரையாற்றினார். CITU அகில இந்திய கன்வீனர் தோழர்.ஹேமலதா கருத்தரங்கத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தொழிற் சங்கத்தில் பெண்கள் பங்கு குறித்தும், சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் எழுச்சி உரை நிகழ்த்தினார். கருத்தரங்கம் தெலுங்கானா  CITU உதவித் தலைவர் தோழியர்.ரமாதேவி மற்றும் முன்னாள் டீன் தோழியர்.உஷா தேவி இருவரையும் கெளரவித்தது. நமது BSNLEU பொதுச் செயலர் தோழர்.பி. அபிமன்யு அவர்கள் இக் காலகட்டத்தில்   பெண்கள் முன் உள்ள கடமைகள் குறித்து விலகி உரையாற்றினார்.  
     நமது மதுரை மாவட்டத்திலிருந்து தோழியர்கள் சுமதி, வள்ளி, நேவிஸ் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.  வெற்றிகரமாக நடைபெற்ற அகில இந்திய கருத்தரங்கத்தில் அகிலஇந்திய கன்வீனராக, நாகர்கோவில் தோழர் P.இந்திரா அவர்களை ஒருமனதாக தேர்வு  செய்துள்ளார்கள்.
தோழர் P.இந்திரா அவர்கள் பணி சிறக்க நமது  மதுரை  மாவட்ட சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. 

No comments:

Post a Comment