1968ம் ஆண்டு தபால் தந்தி ஊழியர்களுடைய அகில இந்திய போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தினை சட்ட விரோதமெனக் கூறி தடை செய்த அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு அத்துடன் நில்லாமல் அந்தப் போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்குவதற்கும் முற்பட்டது. அகில இந்திய அளவில் செயல்பட்ட சங்கத் தலைவர்கள் பலரும் பலவகைகளில் பழிவாங்கப்பட்டனர். வீரம் செறிந்த அந்தப் போராட்டத்தை மதுரையில் முன்னின்று நடத்தியவர் தோழர். ஆர். சௌந்தரராஜன்.சக தோழர்களால் சீனியர் “சௌந்தர்” என்று அன்போடு அழைக்கப்படும் சௌந்தரராஜனின், மறைவிற்கு நமது ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
79 வயதாகும் தோழர்.ஆர். சௌந்தர் அண்மைக் காலமாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் . தோழர்களோடு அவரது இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்த போது அவரால் கோர்வையாகப் பேச முடியவில்லை.
தொலைபேசித் துறையில் பணியில் இருந்த நாட்களிலும், பணி ஓய்வு பெற்ற பிறகும் தோழர்.ஆர். சௌந்தரராஜன் தான் ஏற்றுக்கொண்ட தத்துவத்திற்காக இயக்கத்திற்கு ஆற்றிய பணி பாராட்டுக்குரியது. பின்பற்றத்தக்கது.
இறுதி நிகழ்ச்சி 3-7-17 மதியம் 1 மணிக்கு மேல் நடைபெறும்.
வீட்டு விலாசம் :
பிளாட் எண் :616
கற்பக நகர் , 11 வது தெரு,
மதுரை 7.
No comments:
Post a Comment