மத்திய அரசு தற்போது அமல்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தலை சிறந்த பொருளாதார அறிஞரான பேராசிரியர் பிரபாத் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
ஜிஎஸ்டி அமல்படுத்த பட்ட பின்பு, எந்த மாநில அரசுகளும், எந்த பொருளுக்கு எவ்வளவு வரி என தீர்மானிக்க முடியாது.
இது அரசியல் அமைப்பு சட்டம் மாநில அரசுகளுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள அதிகாரம். இப்ப இந்த உரிமை முற்றாக மறுக்கப்பட்டு விட்டது.
அனைத்து வரி அதிகாரமும் நடுவண் அரசில் மையப்படுத்தப்பட்டு விட்டது.
எதாவது ஒரு மாநில அரசு உள்ளூர் தேவை அடிப்படையில் மாற்று வரி யோசனைகளை இனிமேல் சிந்திக்கவே முடியாது.
அப்படி யோசித்தால் கூட ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அங்கே நடுவண் அரசே ஆதிக்கம் செலுத்தும்.
ஆக,நடுவண் அரசை பரிபூரணமாக சார்ந்தே மாநில அரசுகள் வரி விசயத்தில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.
இது இந்திய கூட்டாட்சி கோட்பாட்டை குழிதோண்டி புதைப்பதாகும்.
எனவே ஜிஎஸ்டி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.
எனவே ஜிஎஸ்டி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது.
இது உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி விகிதத்தில் 2 சதவீத வளர்ச்சியை அதிகரிக்கும் என கூறி , எந்த வித அர்த்தமும் இல்லாத ஒரு பொருளாதார மோசடியை அரங்கேற்றியிருக்கின்றனர்..
ஜி.எஸ்.டி என்பது நாட்டில் உள்ள கார்பரேட்டுகளின் விருப்பம் ஆகும். அதையே மோடி அரசு நிறைவேற்றியிருக்கிறது. குறுகிய காலத்தில் உங்களின் நிதிநிலை சீர்குலைவை சந்திக்காது எனக்கூறியே மாநில அரசுகளின் ஒப்புதலை மோடி அரசு பெற்றிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment