bsnleu

bsnleu

welcome

welcome

Sunday, 30 July 2017

அன்புத்தோழர்.முத்துசுந்தரம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...


அன்புத்தோழர்.ஆர்.எம்.எஸ்.
என அன்பாக அழைக்கப்படும் ...
முத்துசுந்தரம் அவர்களுக்கு 
கண்ணீர் அஞ்சலி...
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் பிறந்து இந்தியா முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தை வளர்ப்பதற்கும் , ஊழியர்களின் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியும், தன்னுடைய பேச்சில் மட்டும் முற்போக்குக் கருத்துக்களை சொல்பவராக இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையிலும் தன்னுடைய குழந்தைகளுக்கு சாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று நடத்தி வைத்தவர்.  ஓர் முன்  உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். அன்புத் தோழர்.ஆர்.முத்துசுந்தரம் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்... 


Saturday, 29 July 2017

BSNL அலுவலர்-ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் முழு வெற்றி...

புதுதில்லி, ஜூலை 28-
பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தின்கீழ் இயங்கும் சங்கங்கள் இணைத்து விடுத்திருந்த வியாழன் ஒருநாள் வேலைநிறுத்தம் முழு வெற்றி பெற்றுள்ளது.
Image result for RED SALUTE bsnleu2017 ஜனவரி 1 முதல் ஊதியத் திருத்தம், ஓய்வூதியத் திருத்தம், நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டு ஓய்வுபெற்றுள்ள ஊழியர்களுக்கு ஓய்வுகாலப் பயன்கள் முதலியவற்றிற்காகவும் பிஎஸ்என்எல் சங்கங்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை நிறுத்தக்கோரியும் இவ்வேலைநிறுத்தம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள செய்திகளின்படி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள், நிர்வாக அலுவலகங்கள், தொலைபேசி இணைப்பகங்கள் முற்றிலுமாக செயல்படாமல் வெறுமனே காட்சியளித்துள்ளன. வேலைநிறுத்தம் எதிர்பார்த்ததைவிட சக்தியாக வெற்றிபெற்றுள்ளது. அலுவலகங்கள் முன்நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் அலுவலர்களும், ஊழியர்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.
பிஎஸ்என்எல் அலுவலர்கள்-ஊழியர்களின் ஒருநாள் வேலை நிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றிருப்பதிலிருந்தாவது அரசாங்கமும், நிர்வாகமும் படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திசுமுக தீர்வுகாண முன்வரவேண்டும். இல்லையேல்,  காலவரையற்ற வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்கள் தீவிரமாகும் என்று பிஎஸ்என்எல் அலுவலர்-ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் கன்வீனர் பி.அபிமன்யு தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 5 இடங்கள் தேர்வு???தமிழக அரசு தகவல்...

Image result for aiims 2017தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மத்திய அரசு கேட்டுக்கொண்ட தற்கிணங்க ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு, மதுரை மாவட்டம் தோப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 இடங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவற்றில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமையவேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!


31-07-17 மதுரையில் பணி நிறைவு பாராட்டு விழா . . .


அனைவரின் பணி நிறைவு காலம் சிறக்க BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.

Friday, 28 July 2017

BSNL பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற ஊதியம் ...

அருமைத் தோழர்களே ! நமது  BSNL நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில் திறனுக்கேற்ற ஊதியம் வழங்குவதற்கான., உத்திரவை தமிழ் மாநில நிர்வாகம் 24-07-2017 அன்று வெளியிட்டுள்ளது
"திறனுக்கேற்ற கூலி" - ஒப்பந்த ஊழியர்களின் பணித்தன்மை வரையறுக்கப்பட்டது.




ஒப்பந்த ஊழியர்களுக்கு அவர்கள் செய்யும் பணித்தன்மையின் அடிப்படையில் "திறனுக்கேற்ற கூலி" வழங்கப்பட வேண்டும் என நமது சங்கம் துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையரிடம் கொடுத்த புகாரின் இறுதிக்கட்ட சமரசப்பேச்சுவார்த்தை , 26/07/2017  அன்று நடைபெற்றது
Dy Chief Labour Commissioner முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், TNTCWU சங்கமும், BSNL நிர்வாகமும் கலந்து கொண்டதுநமது கோரிக்கையான  Categorisation of Contract Labourers என்பதை ஏற்றுக் கொண்டதாக நிர்வாகம் தெரிவித்தது.  இது சம்பந்தமாக 24.07.2017 தேதியிட்ட, உத்தரவை தொழிற்சங்கத்திடம், நிர்வாகம் அளித்தது
BSNLEU மற்றும் TNTCWU சங்கத்தின்சார்பாக நடத்தப்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாகவும், தொழிலாளர் நல ஆணையருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தைகளின் காரணமாகவும் ஒப்பந்த தொழிலாளர்களின் பணித்தன்மை அடிப்படையில் RECATEGORIZATION செய்யப்பட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது
இது மகத்தானது, போற்றத்தக்கது, கொண்டாட படவேண்டியதுஒப்பந்த ஊழியர்களுக்கு நல்லதொரு நியாயம் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்

ஊதிய மாற்றம் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்...

அருமைத் தோழர்களே ! பொதுத்துறை ஊழியர்களுக்கான மூன்றாவது ஊதிய மாற்றத்தை பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு அமலாக்க வலியுறுத்தி வியாழனன்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை செய்யும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் பெற முடியாதபடி மத்திய அரசு செயலாளர்கள் குழுவின் பரிந்துரை முட்டுக்கட்டையாக உள்ளது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு விலக்கு அளித்து, ஊதிய மாற்றத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் இணைந்து வியாழக்கிழமை 27-07-17 ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அகில இந்திய அளவில் அறிவித்தன.


இதன்ஒருபகுதியாக, மதுரை  மாவட்டத்திலுள்ள அனைத்து பிஎஸ்என்எல் அலுவலகங்களிலும் அதிகாரிகள், 27-07-17 அன்று  ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மதுரை லெவல்-4 வளாகத்தில் உள்ள பிஎஸ்என்எல்  அலுவலக வளாகத்தில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட  உதவிச்  செயலர், தோழர். ஜி.சந்திரமோகன், SNEA சங்கத்தின் மாவட்டத்தலைவர் தோழர். விஜயகுமார்   ஆகியோர் கூட்டுத் தலைமை பொறுப்பேற்றனர். BSNLEU மாவட்டச்செயலர், தோழர்.சி.செல்வின் சத்தியராஜ், மாவட்ட நிர்வாகிகள் கே.என். செல்வம், என்.. செல்வம்,  SNEA சார்பாக மாவட்டச் செயலர். தோழர். நாகராஜ், மாநில உதவிச் செயலர் தோழர். அழகர்சாமி, விஜயகுமார், TNTCWU மாவட்டச் செயலர் தோழர்.என். சோணைமுத்து ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இறுதியாக தோழர் அழகுபாண்டிய ராஜா நன்றி கூறினார்.  இப்போராட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






Wednesday, 26 July 2017

பிஎஸ்என்எல் அலுவலர்கள், ஊழியர்கள் வேலைநிறுத்தம் . . .

பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வரும் ஜூலை 27 அன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்திட முடிவு செய்திருப்பதாக, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கன்வீனர் பி.அபிமன்யு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பி.அபிமன்யு வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “ஊதியத் திருத்தம் கோரி, வரும் ஜூலை 27 அன்று பிஎஸ்என்எல் ஊழியர்களும், அலுவலர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பொதுத்துறை ஊழியர்களுக்கான ஊதியத் திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள்  2017 ஜனவரி 1 அன்றே தொடங்கியிருக்க வேண்டும். இதற்காக ஓய்வூபெற்ற நீதிபதி சதிஷ் சந்திரா தலைமையில் மூன்றாவது ஊதிய திருத்தக்குழு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. அக்குழுவும் தன் அறிக்கையை அரசாங்கத்திற்கு அனுப்பி அமைச்சரவைக்குழுவும்  அதனை 2017 ஜூலை 19 அன்று ஏற்றுக்கொண்டுவிட்டது. அக்குழு அளித்துள்ள பரிந்துரையில் மிகவும் முக்கியமான ஒன்று, தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக லாபம் ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத் திருத்தம் செய்திட வேண்டும் என்பதாகும்.
இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் பிஎஸ்என்எல் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஊதியத் திருத்தத்திற்கு தகுதி அற்றவர்களாகிறார்கள்.
பிஎஸ்என்எல் நிறுவனம் இன்றைய தினம் நட்டத்தில் இயங்குவதற்கு அதன் ஊழியர்கள் காரணமல்ல, மாறாக அரசாங்கமே காரணம் என்பதையும் அது அமல்படுத்திவரும் பிஎஸ்என்எல் விரோத கொள்கைகளே காரணம் என்பதையும் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம், 2006 ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம்  ஆண்டுவரை தன்னுடைய மொபைல் வலை விரிவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களைக் கொள்முதல் செய்வதற்கு அரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட டெண்டர்களை அரசாங்கம் ஒன்றன்பின் ஒன்றாக தள்ளுபடி செய்து வந்துள்ளது. தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செய்து வந்தது.
இவ்வாறு அரசாங்கம் தொடர்ந்து முட்டுக்கட்டை விதித்து வந்ததன் காரணமாகவே, மொபைல் வளர்ச்சியில் BSNL தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லை. ‘
எனவே, பிஎஸ்என்எல் அலுவலர்களும், ஊழியர்களும் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 27 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கும் அரசாங்கம் செவிசாய்க்கவில்லைஎன்றால், BSNL அலுவலர்கள்ஊழியர்கள் போராட்டங்கள் தீவிரமாகும்.”   இவ்வாறு பி.அபிமன்யு கூறியுள்ளார்.