bsnleu

bsnleu

welcome

welcome

Sunday 5 November 2017

DSMM மதுரை மாநாட்டில் பிரகாஷ் அம்பேத்கர் முழக்கம்

மதுரை  மாநாட்டில் பிரகாஷ் அம்பேத்கர் துவக்கவுரையாற்றினார். மேடையில் தலைவர்கள் (இடமிருந்து) கே.சாமுவேல் ராஜ், தொல்.திருமாவளவன், ஆர்.ராதாகிருஷ்ணன், கே.வரதசான், பி.வி.ராகவலு, பி.சம்பத், வி.சீனிவாசராவ் உள்ளிட்டோர்.
மதுரை, நவ. 4 -
அனைத்துச் சாதியினரையும் அர்ச்சக ராக்கி, கேரள அரசு எடுத்த முடிவு, ஆர்எஸ்எஸ் தத்துவத்திற்கு விழுந்த அடி என்று பிரகாஷ் அம்பேத்கர் குறிப்பிட்டார்.தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் அகில இந்திய மாநாடு, மதுரையில் சனிக்கிழமையன்று பேரெழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டைத் துவக்கி வைத்து, பரிபா பகுஜன் அமைப்பின்தலைவரும், பாபா சாகேப் அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் உரையாற்றுகையில் கூறியதாவது:தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்ன ணியின் அகில இந்திய மாநாட்டைத் துவக்கிவைப்பதில் பெருமை கொள்கிறேன். நாடு, இன்று சிரமமான திசையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இரண்டுவகையான முரண்பட்ட சிந்தனைப் போக்குகள், ஒரே தளத்தில் இயங்க முடியாது. ஒன்று, சமூகநீதிக்கு, சமத்துவத்திற்கு எதிரான போக்கு.
மற்றொன்று, ஆதரவான போக்கு. இதில், இரண்டில் ஒன்று காணாமல் போக வேண்டும். சமூகநீதிமற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற் கான போராட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். கலாச்சார, சமூக-பொருளாதார சூழல் குறித்து, 1947-50களில் பெரும் விவாதம் நடைபெற்றது. சோசலிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள், காந்தியவாதிகள் இந்த விவாதங்களில் பெருமளவு பங்கெடுத் தார்கள். அரசியல் நடவடிக்கையிலிருந்தும், அரசிலிருந்தும் மதம் விலகி நிற்க வேண்டும் என்று, மார்க்சிய வாதிகள், சோசலிஸ்ட்டுகள் கூறினர். ஆனால், இந்து அல்லாதவர்கள், இரண்டாம் தரக் குடிமக்கள் போல நடத்தப்பட வேண்டும்; அவர்களுக்கு வாக்குரிமை, சொத்துரிமை, கல்வி பெறும்உரிமை கூடாது என்றார்கள் இந்துத்துவா வாதிகள். இந்த முரண்பாடு, அரசியல் சாசனத்தை உருவாக்கும்போது, பெரும் விவாதமாக எழுந்தது. ஜனநாயக- சோசலிசக் குடியரசைக் கட்டமைக்க முற்போக்காளர்கள் முயன்றனர்.
ஆனால், இன்று சூழல் மாறியுள்ளது. பிரதமரே பொதுவெளியில் அரசு சார்பில் குறிப்பிட்ட மதத்தின் பூஜையை மேற்கொள்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆயுதப் பயிற்சியைத் துவக்கி வைக்கிறார். சமூக ரீதியிலான ஒடுக்குமுறை, தலித் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, பிற சமூக மக்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.நாம் இப்போது இணைந்து உரக்கப் பேச வேண்டும். சாதிக் கொடுமைகளைத் தடுப்பது, தீண்டாமைக் கொடுமைகளை ஒழிப்பது என்பதைத் தாண்டி, சாதியத்தைத் தகர்க்க வேண்டும். இன்றைக்கு, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு, மிகச்சிறந்த முன்னுதாரணமான நகர்வைக் கொண்டுள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற இந்த நகர்வு, ஆர்எஸ்எஸ் பரிவாரத்திற்கு கடுமையான சவாலாகும். கோயில், மதம் என்ற தளத் திலும், சமூகத் தளத்திலும் நாம் சாதியத்தைஒழிக்க வேண்டும். இது நாம் எடுத்து வைக்க வேண்டிய முதல் அடி. அடுத்த அடியாக, சாதியற்ற சமூகத்தை கட்டமைக்க, மக்களைத் தயார்ப்படுத்த வேண்டும்; அந்த திசைவழியில் பயணிக்க வேண்டும்.
‘லவ் ஜிகாத்’ என்ற கூச்சலுக்கு எதிராக குரல்கொடுத்து, சாதி மறுப்புத் திருமணங்களை முன்னெடுக்க வேண்டும்.இன்று சாதி மறுப்புத் திருமணம் செய்தாலும், ஆணின் சாதியே குழந்தைக்குகுறிக்கப்படுகிறது. சாதி மறுப்புத் திருமணம்செய்தவர்களின் குழந்தைகளை, சாதி யற்றவர்கள் என்று அறிவிக்க வேண்டும். நமது குழந்தைகள் எத்தகைய கல்வியைப் பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக நாம் இருக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் வாய்ப்பு, உரிமை உத்தர வாதப்படுத்தப்பட வேண்டும்.இடஒதுக்கீடு என்பது, பிறரின் உரிமையை மறுப்பது அல்ல; என்பதை உரக்கச் சொல்ல வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்பது மாணவர்களிடையே இடஒதுக்கீடு குறித்த எதிர்மறையான சிந்தனையை உருவாக்குகிறது. மனுவாதிகள், மதத்தை மட்டுமல்ல; சாதியையும் சேர்த்தே முன்வைக்கிறார்கள்; தீண்டாமையை நியாயப்படுத்துகிறார்கள்; இதை நமது அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் சாசனத்திற்கு எதிராக மனுவாதிகள் பேசுகிறார்கள். பண்பாட்டு மேலாதிக்கத்தையே ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முன்வைக் கிறார்கள்.
இது நமக்கு உடன்பாடானது அல்ல! நாம் பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்டவர்கள். வேற்றுமையில் ஒற்றுமையைக் காண்பவர்கள். 2014-16ல் எவ்வளவு புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டன; ஏன், நவம்பர் 8-இல் மோடி பணமதிப்பு நீக்கத்தைஅறிவித்தார்? ஜூலையில் அமெரிக்கா சென்ற மோடி, டெபிட் கார்டு ஹோல்டர்ஸ் மத்தியில் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்தார். இதற்கும் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கும் தொடர்பு உண்டு. நமது நாட்டின் பொருளாதார இறையாண்மையை, அடுத்த நாட்டிடம் விட்டுக் கொடுக்க முடியாது. பாஜக அரசு உள்ளூர் வியாபாரிகளை முற்றிலும்அப்புறப்படுத்தி, வெளிநாட்டு நிறுவனங் களை நிலைநிறுத்தத் துடிக்கிறது. அத்தியாவசியச் சேவைகள் அரசின் கையில் இருக்க வேண்டும். நாம் இன்றைக்கு எதிர்வினை ஆற்று பவர்களாகவே இருக்கிறோம். இந்த அரசை வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். இடதுசாரிகளான நாம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்றுபவர்களாக, ஆட்சியில் அமர்பவர்களாக, மக்களுக்காக செயல்படுபவர்களாக இருப்போம் என்று உறுதியேற்போம்.
நன்றி :தீக்கதிர் 

No comments:

Post a Comment