bsnleu

bsnleu

welcome

welcome

Tuesday 28 November 2017

தேசியவாதம் ஆபத்தானது; பொருளாதாரத்தை சீரழித்துவிடும்! ஆர்எஸ்எஸ் - பாஜகவை மறைமுகமாக சாடிய ரகுராம் ராஜன்


Add caption
மதப்பெரும்பான்மை அடிப்படையிலான 

பிரிவினைவாதத்தை, தேசியவாதம் என்ற 
பெயரில் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் பரப்பி 
வருகின்றன. தங்களின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் தேசவிரோதிகள் என்று சித்தரித்து வருகின்றன. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட இந்துக்கள் அல்லாத பல்வேறு தரப்பினரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் மிரட்டி வருகின்றன.

இந்நிலையில், தேசியவாதம் மிகவும் ஆபத்தானது; அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீரழித்து விடும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:பெரும்பான்மை தேசியவாதம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும். பிரிவினைவாதத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வகை தேசியவாதம், பொருளாதாரத்தை பின்னோக்கி கொண்டு செல்லும். பெரும்பான்மை சமூகத்தினரின் உணர்வு களை தூண்டிவிட்டுத்தான் பெரும்பான்மை தேசியவாதம் செயல்படுகிறது. அது மற்றவர்களின் உணர்வுகளையும் நலன்களை யும் புறக்கணிக்கிறது. உலகம் முழுக்கவும் இதுபோன்ற பிரச்சாரங்கள் நடக்கின்றன. இந்தியாவிலும் அது உள்ளது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் சுய பச்சாதாபம் ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற இந்த வாதம் பயன்படுகிறது.

சமூகத்தில் பின்தங்கிய நலிந்த மற்றும் சிறுபான்மை பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுவதை சுட்டிக் காட்டியும் இதுபோன்ற பிரச்சாரங்கள் நடக்கின்றன. தேசப்பற்று வேறு தேசியவாதம் என்பதை நான் நாட்டுப்பற்று என்பதோடு இணைத்து பார்க்கவில்லை. இரண்டும் வேறு. தேசியவாதம் என்பது பிரிவினையை ஏற்படுத்தக் கூடியது, ரொம்ப ஆபத்தானது. அதேநேரம் இதற்காக குரல் கொடுப்போர் எல்லோரையும் கொடுமைக்காரர்களாக பார்க்க வேண்டியதில்லை. அவர்கள் குரலும் கேட்கப்பட வேண்டியதுதான். இதுபோன்ற பிரச்சாரங்களை தவிர்க்க பெரும்பான்மை சமூகத்தினருக்கும் வேலைவாய்ப்பு போதிய அளவில் கிடைக்க வழி செய்ய வேண்டும். ஏனெனில், சிறுபான்மையினர் வரலாற்று ரீதியில் வஞ்சிக்கப்பட்டவர்கள் என்ற காரணத்தை தொடர்ந்து கூறியபடி பெரும்பான்மையினருக்கு வேலைவாய்ப்பை மறுப்பது இதுபோன்ற எதிர்மறை பிரச்சாரங்கள் வலுபெற காரணமாகிவிடும்.

வேலையின்மைதான் தற்போது இந்தியா கடக்க வேண்டிய முக்கியமான பொரு ளாதாரத் தடையாகும்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.மக்களை பிளவுபடுத்தும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் நடவடிக்கைகளை பல்வேறு நேரங்களில் ரகுராம் ராஜன் கண்டித்தே வந்துள்ளார். இதனாலேயே ரகுராம் ராஜனைபதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஓராண்டுக்கு முன்பு பாஜகதலைவர் சுப்பிரமணியசாமி கடிதம் எழுதினார். அதில், ரகுராம் ராஜனை, தேசிய வாதச் சிந்தனை அற்றவர் என்றே சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment