ஜிஎஸ்டி வரி விதிப்பு குளறுபடிகளுக்கு காரணமான அருண்ஜெட்லியை நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென, பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா ஆவேசப்பட்டுள்ளார்.பாட்னாவில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் அவர் இது தொடர்பாக மேலும் பேசியதாவது:நாட்டின் பொருளாதாரத்திலும், ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. நிதியமைச்சரே குழப்பமான மனநிலையில்தான் இருக்கிறார். ஜிஎஸ்டி வரிவிதிப்பை முறையாக ஆராய்ந்து நடைமுறைப்படுத்த அவர் தவறி விட்டார்.
அதன் காரணமாகத்தான் வரி விதிப்பில் தற்போது நாள்தோறும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர்தான் ஜிஎஸ்டி வரி விகிதத்தை நிர்ணயித்தார்கள் என்றால், தற்போது அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எப்படி வந்தது? இப்போதும்கூட மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அவர்கள் வரியைக் குறைக்கவில்லை;
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்துவதில் செய்த தவறை மறைக்கவே இந்த நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானபோது, ரூ. 5 லட்சம் கோடி கறுப்புப் பணம் வங்கிகளில் டெபாசிட் ஆகாது என்றும், அவை ஒழிந்துவிடும் என்றும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், 99 சதவிகித பழைய ரூபாய் நோட்டுகளும் வங்கிகளுக்கு வந்து விட்டன. இவர்களால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர முடியவில்லை. எனவே, பண மதிப்பு நீக்கமாகட்டும், ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கமாகட்டும், இவற்றின்விளைவுகளை ஆராயாமல் நிதியமைச்சர் அருண்ஜெட்லிசெயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை நீக்கிவிட்டு புதிய நிதியமைச்சரை நியமிக்க வேண்டும்.இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment