bsnleu

bsnleu

welcome

welcome

Wednesday, 29 March 2017

SBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை . . .

மோடி&அருண்ஜேட்லிகூட்டணியின் - ஊழியர்விரோத/ இளைஞர்விரோதநடவடிக்கை
Image result for sbi loginஇந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கியான STATE BANK OF INDIAதனது மொத்த பணியாளர்களில் 10 சதவீத பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது. புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கப்படுவதும் குறைக்கப்படும்.
எஸ்பிஐ வங்கியுடன் ஐந்து துணை வங்கிகள் இணைப்பு நடை பெற்றதையடுத்து இந்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. அடுத்த இரண்டு ஆண்டு களில் கணிசமாக வேலையிழப்பு இருக்கும் என்றும், புதிய பணி யாளர்களை எடுப்பதும் குறைக்கப் படுவதுடன், மின்னணு முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் பணியாளர்கள் குறைக் கப்படுவார்கள், வாய்ப்பு அமைந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் 10 சதவீதம்பேர் குறைக்கப் படுவார்கள். தற்போது எஸ்பிஐ வங்கியில் 2,07,000 ஊழியர்கள் உள்ளனர். இதனோடு எஸ்பிபிஜே, எஸ்பிஎம், எஸ்பிடி, எஸ்பிபி, எஸ்பிஹெச் மற்றும் பாரதிய மகிளா வங்கி என 6 வங்கிகளில் உள்ள 70,000 பணியாளர்கள் ஏப்ரல் 1 ம் தேதி முதல் எஸ்பிஐ பணியாளர்களாக இணைகின்றனர். இந்த இணைப்புக்கு பிறகு எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை 2,77,000 உயர உள்ளது.       இந்த எண்ணிக்கையை 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 2,60,000 ஆக குறைக்கப்படும். அதாவது 10 சதவீதத்துக்கும் குறைவாக பணிநீக்கம் இருக்கும் என்றார். இணைப்புக்கு பிறகு பணிகளை மறுவரையறை செய்த பிறகுதான் பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என்று குறிப்பிட்டதுடன், இது கட்டாய பணி நீக்கமாக இருக்காது, இதற்காக விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்படும், மேலும் பணிநிறைவு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறுபவர்களுக்கு மாற்றாக உடனடியாக பணியாளர்கள் தேர்வு இருக்காது.டிஜிட்டல் முயற்சிகளால் மனித உழைப்பு குறையும் என்றதுடன், இது ஒன்றோடு ஒன்று இணைந்த நிகழ்வுகள் என்றும் கூறினார்.  …     நன்றிதிதமிழ்இந்து 28 03 2017

No comments:

Post a Comment