மரியாதைக்குரிய மேடம் அவர்களுக்கு,.. .மார்ச் 15,2017 அன்று மும்பையில் இந்திய தொழில் அமைப்பு கூட்டத்தில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தால், கடன்களை திருப்பிச் செலுத்தும் கட்டுப்பாடு சீர்குலையுமென தாங்கள் ஆற்றிய உரைக்கு எதிர்வினை ஆற்றும் விதத்தில், இந்த திறந்த மடலை எழுதுகிறோம்.இந்நாட்டில், 23 மாநிலங்களில், 1.7 கோடி உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய சங்கம் எங்களின் அகில இந்திய விவசாயிகள் சங்கம்.கடன் பொறியிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகிறோம். விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பதற்கு அவர்கள் கடன் பொறியில் சிக்கியிருப்பது காரணம் அல்ல.மாறாக, அரசும், ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் தவறான வேளாண் கொள்கைகள் தான்தங்களுடைய ரத்தத்தையும், வியர்வையும் சிந்தி, கடின உழைப்பின் மூலம் மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை காப்பாற்றும் பொறுப்பு அரசிடம்தான் உள்ளது.ஆனால், விவசாயிகளுக்கெதிரான சந்தை சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை காட்டிலும் கூடுதலான விலை, கொடுக்காமல், அவர்களை சுரண்டும் பெரும் தொழில்/வணிக நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளன.அதனால், இந்திய விவசாயிகள் கடுமையாக உழைத்த போதிலும், விவயம் கட்டுபடியாகாத தொழிலாக மாறிவிட்டது. கட்டுபடியாகும் விலை என்னாச்சுஅனைத்து பயிர்களுக்கும், உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் கூட்டி விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் தெளிவாக பரிந்துரை செய்துள்ளது.2014 லோக்சபா தேர்தலின் பொழுது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பரிந்துரை அமல்படுத்தப்படும் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை அதை அமலாக்க பிரதமர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எனவே, உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ள விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்துவதில் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டுமென எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கும்?இது தொடர்பாக எங்கள் கவனத்திற்கு வருவது என்ன தெரியுமா?சமீபத்தில், 2013-15 வரையிலான நிதியாண்டுகளில் அரசுக்கு சொந்தமான 29 வங்கிகள், பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 1 லட்சத்து 14ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளன.ஆனால், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான நீங்கள் பெரும் தொகையிலான கடனை தள்ளுபடி செய்த பொழுது மௌனமாக இருந்தது ஏன்?கடனை திருப்பிச் செலுத்துவதில் கட்டுப்பாடு பற்றி கவலைப்படாதது ஏன்? திரும்பப் பெறுக…விவசாயிகள், குறிப்பாக, ஏழை, சிறு விவசாயிகள் கடும் வறுமையில் சிக்கி, கடன் பொறியில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். இதனால், ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி குடி பெயர்வது பெரிதும் அதிகரித்துள்ளது. நாட்டில் ஏழை-பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி அதிகரி த்துள்ளது.இவ்வளவு இடர்களுடன், போதிய அளவு கடன் கிடைக்காமல், கந்து வட்டிக்கு தனியாருடன் கடன் பெறும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், ஏழை, சிறு விவசாயிகள் உயிர் வாழவும், கடன் பொறியிலிருந்து விடுபடவும் ஆதரவு தேவைப்படுகிறது.நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனத்தின் தலைவரான தாங்கள், விவசாயிகளுக்கெதிரான கருத்தை கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது.நீங்கள் கூறியதை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம் அத்தகைய கருத்தை கூறியதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரை, விவசாயத்தை கட்டுபடியாகும் தொழிலாக மாற்ற, கட்டுபடியாகும் விலை கிடைக்க, கந்துவட்டிக்காரர் பிடியிலிருந்து விவசாயிகளை விடுவிக்க, விவசாயிகளை பாதுகாக்க, விவசாயத்தை முன்னேற்ற,தற்போது அலை அலையாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த எங்கள் போராட்டங்கள் தொடரும்.இப்படிக்கு,ஹன்னன் முல்லாபொதுச் செயலாளர்,அகில இந்திய விவசாயிகள் சங்கம்
No comments:
Post a Comment