bsnleu

bsnleu

welcome

welcome

Sunday 26 March 2017

செய்தி . . .துளி . .

செய்தி
  1. எம்.டி.என்.எல் மும்பை மற்றும் தில்லியில் செயல்படும் தொலைதொடர்பு நிறுவனம். பி.எஸ்.என்.எல் மும்பை மற்றும் தில்லியை தவிர இந்தியாவின் அணைத்து நகரத்தில் செயல்படும் தொலை தொடர்பு நிறுவனம். மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இவ்விரண்டு நிறுவனங்களும் வரும் ஜூன் மாதம் முதல் ஒன்றிணைந்து செயல்பட போவதாக பி.எஸ்.என்.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார்.வரும் ஜூன் மாதம் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒன்றாக இணையப்போவதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டிருந்தது.மேலும் கடந்த மாதம் நடந்த தொலைதொடர்ப்பு துறையின் உயர்மட்ட குழு கூட்டத்தில் , தொலைதொடர்பு துறையில் தற்போது அதிகரித்துள்ள போட்டியின் காரணமாக நிதி பற்றாக்குறையால் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இந்த இரு நிறுவனங்களும் இணைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.இந்நிலையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரு தொலை தொடர்பு நிறுவனங்களும் ஒன்றிணைய போவதாக பி.எஸ்.என்.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார். மேலும் அவர், இவ்வாறு ஒன்றிணைவது இந்த இரண்டு நிறுவனங்களும் லாபம் என்றாலும் , இவ்விரு நிறுவனங்களுக்கான கடன் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை முதலில் சரி செய்ய வேண்டும். நிறுவன மற்றும் மொபைல் பிரிவு வணிகத்தில் இவ்விரு நிறுவனங்களுக்கும் தற்போது ஒருமைப்பாட்டுடன் தான் செயல்பட்டு வருகிறது.எம்.டி.என்.எல் நிறுவனத்திற்கு அதிகப்படியான கடன் உள்ளது. ஒன்றிணைந்த பின்பும் கடன் தொடராது இருக்க நாங்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் . இல்லையேல் , இது மிக பெரிய பாரமாகிவிடும் . ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு கூட பேன் – இந்தியா (இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் செயல்படுவது) வழிப்பாதை மிக முக்கியம். மிக பெரிய வர்த்தக நிறுவனங்களின் தலைமை அலுவலகம் மும்பை மற்றும் தில்லி தான் உள்ளது. அதனால் நாங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட எம்.டி.என்.எல் உடன் இணைவதன் முக்கியமே.இவ்வாறு ஒன்றிணைவதனால் , இரு நிறுவனங்களும் பேன் – இந்தியா மொபைல் சேவையை மூலமாக மும்பை மற்றும் தில்லி சந்தைகளில் செயல்பட முடியும் . மேலும் இது புதிய மூலதனத்திற்கு உதவி செய்யும்.பி.எஸ்.என்.எல் வர்த்தக வளர்ச்சி தற்போது 35%-மாக உள்ளது. பேன் – இந்தியா திட்டம் மற்றும் எம்.டி.என்.எல் உடன் ஒன்றிணைவதால் இதன் வளர்ச்சி 45%மாக உயரும் என கூறினார்..

No comments:

Post a Comment