தலைநகர் புதுதில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஆகியோர் திங்களன்று நேரில் சந்தித்து கட்சியின் ஆதரவினை தெரிவித்தனர்.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர் கடந்தபல நாட்களாக தலைநகர் தில்லியில்போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அவர்களது கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. மாநில அரசும்கண்டுகொள்ள மறுக்கிறது. இந்நிலையில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த சீத்தாராம் யெச்சூரி, அவர்களிடையே பேசுகையில், “வறட்சியினால் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயம்முற்றாக அழிந்துள்ளது. விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிவாரணம் எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல” எனக் குறிப்பிட்டார்.“உங்களை சந்திக்க வருவதற்கு முன்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நானும், டி.கே.ரங்கராஜனும் சந்தித்து தமிழக விவசாயிகள் நிவாரணத்திற்கு உரிய நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர் நிதியில்லை என்று கைவிரித்துவிட்டார்.பெருமுதலாளிகளுக்கு 11 லட்சம் கோடியை வட்டியுடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மறுக்கிறது. வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தலைநகர் தில்லிக்கு வந்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் முற்றிலும்நியாயமானது. இதுகுறித்து செவ்வாயன்று மாநிலங்களவையில் எங்கள் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுவார். நியாயத்திற்காக போராடும் விவசாயிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவைவழங்குகிறது. உங்கள் போராட்டத் திற்கு துணை நிற்போம்” என்றும் யெச்சூரி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment