நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடக்காடு உள்ளிட்ட 70 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பணிகளை விடுத்து இந்த போராட்டத்தில் முழு கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.கையெழுத்தானது ;--ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 22 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தம்நேற்று அவசர அவசரமாக டெல்லியில் கையெழுத்தானது. அந்த 22 நிறுவனங்களில் 4 பொது துறை நிறுவனங்களும், ஒரு வெளிநாட்டு நிறுவனமும், 17 தனியார் நிறுவனங்களும் அடங்கும். நெடுவாசலில் ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு கையெழுத்தான நிலையில் அந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு என 30 வகையான அனுமதிகளை பெற வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment