bsnleu

bsnleu

welcome

welcome

Friday, 31 March 2017

நமது தமிழ் மாநில சங்க சுற்றறிக்கை . . .

அருமைத்  தோழர்களே ! நமது  BSNLEU மத்திய சங்க செய்திகளை தொகுத்து நமது தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த  சுற்றறிக்கையை காண இங்கே கிளிக் செய்யவும். . . .

BSNL சேவைகளை பயன்படுத்துவீர் . . .


Thursday, 30 March 2017

கார்ட்டூன் . . . கார்னர் . . .



கவன ஈர்ப்பு தினம்- 05.04.2017

15.03.2017 அன்று புதுடெல்லியில் கூடிய அனைத்து ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டத்தில் 05.04.2017 அன்று ஊதிய மாற்றம் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டை அணிந்து வாயிற் கூட்டங்கள் நடத்தி கவன ஈர்ப்பு தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தயாரிப்பு பணிகளை செய்து வருகின்றோம் . அன்றைய தினம் அணிய இருக்கும் அட்டையில் இடம்பெற வேண்டிய வாசகங்களின் தமிழாக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று பட்டு போராடுவோம். வெற்றி பெறுவோம்.!! 05-04-17 கவன ஈர்ப்பு நாள் அணிய வேண்டிய அட்டையின் வாசகங்களை காண இங்கே கிளிக் செய்யவும்.

30-03-17 பணி நிறைவு பாராட்டு விழா . . .

அருமைத் தோழர்களே ! 30-03-17 அன்று காலை 10 மணிக்கு மேல்  பணி நிறைவு பாராட்டு விழா நமது பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது. கீழ்கண்ட தோழர்கள் இம்மாதம் பணி நிறைவு செய்கின்றார்கள். அனைத்து தோழர்களின் பனி நிறைவு காலம் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழத்துக் களை தெரிவித்துக்கொள்கிறது...
    Image result for retired greetings message
  1. S.அங்கயற்கண்ணி, OS - NJR 
  2. M.ஆதிமூலம், JTO - KDL 
  3. G.தனலட்சுமி , TT - GM(O)
  4. V.ஜெயபாலன், TT - PKM 
  5. J.கல்யாணி , OS - DDG
  6. V.கார்மேகம், ATT - UTM 
  7. P.கருப்பசாமி , OS - PLN
  8. N.நெவிலி , TT - MEL
  9. K.பழனிச்சாமி, AOS -TEI 
  10. M.பழனிச்சாமி , TT - DDG
  11. F.பிலிப், TT - TKM 
  12. S.ராஜேந்திரன், TT - ELLIS 
  13. M.சரோஜா , TT - TKM
  14. A.சுல்த்தான் அலாவுதீன், TT - GM(O) 
  15. S.தண்டபாணி, TT - DDG 
  16. S.வீரகாமு , SOA - BOK
  17. S.ஜெயலட்சுமி , JTO - EMM (VRS)
  18. S.மீனாட்சி சுந்தரம், TT - GM(O).

Wednesday, 29 March 2017

கார்ட்டூன் . . . கார்னர் . . .


23 வது மாநில கவுன்சில் நிகழ்ச்சி நிரல் . . .

அருமைத் தோழர்களே ! நமது தமிழ் மாநில23 வது கவுன்சிலுக்கான  ஆய்படு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

இனிய யுகாதி . . . வாழ்த்துக்கள் . . .


5.4.17 கவன ஈர்ப்பு நாள்

 Matter for the badge, to be worn on the Call Attention Day to be held on 05.04.2017.
The meeting of the unions and associations held at New Delhi on 15.03.2017, has called on the employees to wear Demands Badges on 05.04.2017 and also to conduct gate meetings. The matter to be printed on the badges is given below. Circle and district secretaries are requested to print badges, carrying this matter, to be worn on the Call Attention Day, to be held on 05.04.2017.  
Call Attention Day
05.04.2017 
DEMANDS

(1)    Settle Wage Revision of BSNL Employees w.e.f. 01.01.2017.
(2)    Settle revision of pension from 01.01.2017.
(3)   Implement 30% Superannuation benefits to DR employees.
(4)    Calculate pension contribution on actual basic pay.
 Unions and Associations in BSNL

SBI யில்ஆட்குறைப்பு / புதியநியமனத்திற்குதடை . . .

மோடி&அருண்ஜேட்லிகூட்டணியின் - ஊழியர்விரோத/ இளைஞர்விரோதநடவடிக்கை
Image result for sbi loginஇந்தியாவின் முக்கிய பொதுத்துறை வங்கியான STATE BANK OF INDIAதனது மொத்த பணியாளர்களில் 10 சதவீத பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது. புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கப்படுவதும் குறைக்கப்படும்.
எஸ்பிஐ வங்கியுடன் ஐந்து துணை வங்கிகள் இணைப்பு நடை பெற்றதையடுத்து இந்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. அடுத்த இரண்டு ஆண்டு களில் கணிசமாக வேலையிழப்பு இருக்கும் என்றும், புதிய பணி யாளர்களை எடுப்பதும் குறைக்கப் படுவதுடன், மின்னணு முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் பணியாளர்கள் குறைக் கப்படுவார்கள், வாய்ப்பு அமைந்தால் இரண்டு ஆண்டுகளுக்குள் 10 சதவீதம்பேர் குறைக்கப் படுவார்கள். தற்போது எஸ்பிஐ வங்கியில் 2,07,000 ஊழியர்கள் உள்ளனர். இதனோடு எஸ்பிபிஜே, எஸ்பிஎம், எஸ்பிடி, எஸ்பிபி, எஸ்பிஹெச் மற்றும் பாரதிய மகிளா வங்கி என 6 வங்கிகளில் உள்ள 70,000 பணியாளர்கள் ஏப்ரல் 1 ம் தேதி முதல் எஸ்பிஐ பணியாளர்களாக இணைகின்றனர். இந்த இணைப்புக்கு பிறகு எஸ்பிஐ வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை 2,77,000 உயர உள்ளது.       இந்த எண்ணிக்கையை 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 2,60,000 ஆக குறைக்கப்படும். அதாவது 10 சதவீதத்துக்கும் குறைவாக பணிநீக்கம் இருக்கும் என்றார். இணைப்புக்கு பிறகு பணிகளை மறுவரையறை செய்த பிறகுதான் பணிநீக்க நடவடிக்கை இருக்கும் என்று குறிப்பிட்டதுடன், இது கட்டாய பணி நீக்கமாக இருக்காது, இதற்காக விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்படும், மேலும் பணிநிறைவு அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறுபவர்களுக்கு மாற்றாக உடனடியாக பணியாளர்கள் தேர்வு இருக்காது.டிஜிட்டல் முயற்சிகளால் மனித உழைப்பு குறையும் என்றதுடன், இது ஒன்றோடு ஒன்று இணைந்த நிகழ்வுகள் என்றும் கூறினார்.  …     நன்றிதிதமிழ்இந்து 28 03 2017

Tuesday, 28 March 2017

தில்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து யெச்சூரி ஆதரவு. . .

தலைநகர் புதுதில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஆகியோர் திங்களன்று நேரில் சந்தித்து கட்சியின் ஆதரவினை தெரிவித்தனர்.அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சங்கத்தினர் கடந்தபல நாட்களாக தலைநகர் தில்லியில்போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அவர்களது கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. மாநில அரசும்கண்டுகொள்ள மறுக்கிறது. இந்நிலையில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த சீத்தாராம் யெச்சூரி, அவர்களிடையே பேசுகையில், “வறட்சியினால் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான குடிநீர்தட்டுப்பாடு நிலவுகிறது. விவசாயம்முற்றாக அழிந்துள்ளது. விவசாயிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிவாரணம் எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல” எனக் குறிப்பிட்டார்.“உங்களை சந்திக்க வருவதற்கு முன்பு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை நானும், டி.கே.ரங்கராஜனும் சந்தித்து தமிழக விவசாயிகள் நிவாரணத்திற்கு உரிய நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர் நிதியில்லை என்று கைவிரித்துவிட்டார்.பெருமுதலாளிகளுக்கு 11 லட்சம் கோடியை வட்டியுடன் தள்ளுபடி செய்யும் மோடி அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மறுக்கிறது. வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தலைநகர் தில்லிக்கு வந்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் முற்றிலும்நியாயமானது. இதுகுறித்து செவ்வாயன்று மாநிலங்களவையில் எங்கள் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுவார். நியாயத்திற்காக போராடும் விவசாயிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவைவழங்குகிறது. உங்கள் போராட்டத் திற்கு துணை நிற்போம்” என்றும் யெச்சூரி குறிப்பிட்டார்.

தமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு!

தமிழக மக்கள் போராட்டத்தை மதிக்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது மத்திய அரசு!நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடக்காடு உள்ளிட்ட 70 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பணிகளை விடுத்து இந்த போராட்டத்தில் முழு கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.கையெழுத்தானது  ;--ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 22 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தம்நேற்று அவசர அவசரமாக டெல்லியில் கையெழுத்தானது. அந்த 22 நிறுவனங்களில் 4 பொது துறை நிறுவனங்களும், ஒரு வெளிநாட்டு நிறுவனமும், 17 தனியார் நிறுவனங்களும் அடங்கும். நெடுவாசலில் ஜெம் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு கையெழுத்தான நிலையில் அந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு என 30 வகையான அனுமதிகளை பெற வேண்டியது அவசியம்.

Monday, 27 March 2017

கார்ட்டூன் . . . கார்னர் . . .

வெற்றி ... வெற்றி ... TNTCWU மாபெரும் வெற்றி

 வெற்றி ... வெற்றி ...  மாபெரும் வெற்றி
அருமைத்  தோழர்களே ! மிக  நெடுங் காலமாக பணியாற்றிய 
ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்
என்று ப்பந்ததொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக‌(TNCTWU)
 நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடியதன்
விளைவாக கடந்த 23/3/17 அன்று தீர்ப்புவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 பேர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்.


இதற்காக பணியாற்றிய TNTCWU   மற்றும்   BSNLEU
சங்க தலைவர்களை மனதார பாராட்டுகிறோம்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..

பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல். . .

பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு ஒரு திறந்த மடல்மரியாதைக்குரிய மேடம் அவர்களுக்கு,.. .மார்ச் 15,2017 அன்று மும்பையில் இந்திய தொழில் அமைப்பு கூட்டத்தில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தால், கடன்களை திருப்பிச் செலுத்தும் கட்டுப்பாடு சீர்குலையுமென தாங்கள் ஆற்றிய உரைக்கு எதிர்வினை ஆற்றும் விதத்தில், இந்த திறந்த மடலை எழுதுகிறோம்.இந்நாட்டில், 23 மாநிலங்களில், 1.7 கோடி உறுப்பினர்களைக் கொண்ட மிகப் பெரிய சங்கம் எங்களின் அகில இந்திய விவசாயிகள் சங்கம்.கடன் பொறியிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகிறோம். விவசாயிகள் கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பதற்கு அவர்கள் கடன் பொறியில் சிக்கியிருப்பது காரணம் அல்ல.மாறாக, அரசும், ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் தவறான வேளாண் கொள்கைகள் தான்தங்களுடைய ரத்தத்தையும், வியர்வையும் சிந்தி, கடின உழைப்பின் மூலம் மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை காப்பாற்றும் பொறுப்பு அரசிடம்தான் உள்ளது.ஆனால், விவசாயிகளுக்கெதிரான சந்தை சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை காட்டிலும் கூடுதலான விலை, கொடுக்காமல், அவர்களை சுரண்டும் பெரும் தொழில்/வணிக நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளன.அதனால், இந்திய விவசாயிகள் கடுமையாக உழைத்த போதிலும், விவயம் கட்டுபடியாகாத தொழிலாக மாறிவிட்டது. கட்டுபடியாகும் விலை என்னாச்சுஅனைத்து பயிர்களுக்கும், உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் கூட்டி விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷன் தெளிவாக பரிந்துரை செய்துள்ளது.2014 லோக்சபா தேர்தலின் பொழுது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பரிந்துரை அமல்படுத்தப்படும் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை அதை அமலாக்க பிரதமர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எனவே, உற்பத்தி செலவை கூட ஈடு செய்ய முடியாத நிலையில் உள்ள விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்துவதில் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டுமென எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கும்?இது தொடர்பாக எங்கள் கவனத்திற்கு வருவது என்ன தெரியுமா?சமீபத்தில், 2013-15 வரையிலான நிதியாண்டுகளில் அரசுக்கு சொந்தமான 29 வங்கிகள், பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 1 லட்சத்து 14ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்துள்ளன.ஆனால், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான நீங்கள் பெரும் தொகையிலான கடனை தள்ளுபடி செய்த பொழுது மௌனமாக இருந்தது ஏன்?கடனை திருப்பிச் செலுத்துவதில் கட்டுப்பாடு பற்றி கவலைப்படாதது ஏன்? திரும்பப் பெறுக…விவசாயிகள், குறிப்பாக, ஏழை, சிறு விவசாயிகள் கடும் வறுமையில் சிக்கி, கடன் பொறியில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர். இதனால், ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி குடி பெயர்வது பெரிதும் அதிகரித்துள்ளது. நாட்டில் ஏழை-பணக்காரர்களுக்கிடையேயான இடைவெளி அதிகரி த்துள்ளது.இவ்வளவு இடர்களுடன், போதிய அளவு கடன் கிடைக்காமல், கந்து வட்டிக்கு தனியாருடன் கடன் பெறும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், ஏழை, சிறு விவசாயிகள் உயிர் வாழவும், கடன் பொறியிலிருந்து விடுபடவும் ஆதரவு தேவைப்படுகிறது.நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனத்தின் தலைவரான தாங்கள், விவசாயிகளுக்கெதிரான கருத்தை கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது.நீங்கள் கூறியதை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்சம் அத்தகைய கருத்தை கூறியதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களை பொறுத்தவரை, விவசாயத்தை கட்டுபடியாகும் தொழிலாக மாற்ற, கட்டுபடியாகும் விலை கிடைக்க, கந்துவட்டிக்காரர் பிடியிலிருந்து விவசாயிகளை விடுவிக்க, விவசாயிகளை பாதுகாக்க, விவசாயத்தை முன்னேற்ற,தற்போது அலை அலையாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த எங்கள் போராட்டங்கள் தொடரும்.இப்படிக்கு,ஹன்னன் முல்லாபொதுச் செயலாளர்,அகில இந்திய விவசாயிகள் சங்கம்

Sunday, 26 March 2017

மாவட்டந்தழுவிய போராட்ட அறிக்கை . . .


செயற்குழு கூட்ட செய்திகள்...

வங்கிக் கடன்.... யுனியன் பேங்க்-நீட்டிப்பு . . .

அருமைத்வ தோழர்களே ! நமது ஊழியர்களுக்கு வங்கிக் கடன்.... யுனியன் பேங்க்-நீட்டிப்பு செய்துள்ளது.

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில்   MOU 01.01.2017 TO 31.12.2017 வரை  புதுப்பிக்கப்பட்டு உத்தரவு  ....      


எம்.பி.க்களில் 443 கோடீஸ்வரர்கள் . . .


Image result for member of parliamentஇந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களில், 443 பேர், "பெரும் கோடீஸ்வரர்களாக" இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 82 சதவிகிதம் எம்.பி.க்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள்.
அதிகபட்சமாக பாஜகவில் 237 பேரும், காங்கிரசில் 35 பேரும் கோடீஸ்வரர்கள். அதிமுகவில் 29 பேர் கோடீஸ்வரர்கள்.தீக்கதிர்.

செய்தி . . .துளி . .

செய்தி
  1. எம்.டி.என்.எல் மும்பை மற்றும் தில்லியில் செயல்படும் தொலைதொடர்பு நிறுவனம். பி.எஸ்.என்.எல் மும்பை மற்றும் தில்லியை தவிர இந்தியாவின் அணைத்து நகரத்தில் செயல்படும் தொலை தொடர்பு நிறுவனம். மத்திய அரசின் கீழ் செயல்பட்டும் இவ்விரண்டு நிறுவனங்களும் வரும் ஜூன் மாதம் முதல் ஒன்றிணைந்து செயல்பட போவதாக பி.எஸ்.என்.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார்.வரும் ஜூன் மாதம் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒன்றாக இணையப்போவதாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டிருந்தது.மேலும் கடந்த மாதம் நடந்த தொலைதொடர்ப்பு துறையின் உயர்மட்ட குழு கூட்டத்தில் , தொலைதொடர்பு துறையில் தற்போது அதிகரித்துள்ள போட்டியின் காரணமாக நிதி பற்றாக்குறையால் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இந்த இரு நிறுவனங்களும் இணைவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.இந்நிலையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய இரு தொலை தொடர்பு நிறுவனங்களும் ஒன்றிணைய போவதாக பி.எஸ்.என்.எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அனுபம் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார். மேலும் அவர், இவ்வாறு ஒன்றிணைவது இந்த இரண்டு நிறுவனங்களும் லாபம் என்றாலும் , இவ்விரு நிறுவனங்களுக்கான கடன் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை முதலில் சரி செய்ய வேண்டும். நிறுவன மற்றும் மொபைல் பிரிவு வணிகத்தில் இவ்விரு நிறுவனங்களுக்கும் தற்போது ஒருமைப்பாட்டுடன் தான் செயல்பட்டு வருகிறது.எம்.டி.என்.எல் நிறுவனத்திற்கு அதிகப்படியான கடன் உள்ளது. ஒன்றிணைந்த பின்பும் கடன் தொடராது இருக்க நாங்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் . இல்லையேல் , இது மிக பெரிய பாரமாகிவிடும் . ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு கூட பேன் – இந்தியா (இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் செயல்படுவது) வழிப்பாதை மிக முக்கியம். மிக பெரிய வர்த்தக நிறுவனங்களின் தலைமை அலுவலகம் மும்பை மற்றும் தில்லி தான் உள்ளது. அதனால் நாங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட எம்.டி.என்.எல் உடன் இணைவதன் முக்கியமே.இவ்வாறு ஒன்றிணைவதனால் , இரு நிறுவனங்களும் பேன் – இந்தியா மொபைல் சேவையை மூலமாக மும்பை மற்றும் தில்லி சந்தைகளில் செயல்பட முடியும் . மேலும் இது புதிய மூலதனத்திற்கு உதவி செய்யும்.பி.எஸ்.என்.எல் வர்த்தக வளர்ச்சி தற்போது 35%-மாக உள்ளது. பேன் – இந்தியா திட்டம் மற்றும் எம்.டி.என்.எல் உடன் ஒன்றிணைவதால் இதன் வளர்ச்சி 45%மாக உயரும் என கூறினார்..

Saturday, 25 March 2017

கார்ட்டூன் . . . கார்னர்


விமான பயணத்தில் முதல் வகுப்பு வழங்காததால் ஆத்திரம்: விமான நிறுவன மேலாளரை செருப்பால் 25 முறை தாக்கினார் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெயிக்வாட்! - செய்தி
உ.பி. நிலவரத்த வச்சுப் பாத்தா கெயிக்வாட்டுக்கும் முதலமைச்சர் பதவி கிடைச்சாலும் ஆச்சர்யப் படுறதுக்கில்ல! 

நமது தமிழ் மாநில சங்கத்தின் சுற்றறிக்கை . . .



மாவட்டத்தழுவிய போராட்டம் ... தயாராகுவீர் !