01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் மற்றும் BSNL நிறுவனத்தை அழிக்கும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்ற 2017 டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மதுரை ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து சங்கங்களின் மாநில, மாவட்ட மற்றும் கிளை தலைவர்களையும் முன்னணி தோழர்களையும் மனதார வாழ்த்துகிறோம். நமது போராட்டம் முழு வெற்றி கிட்டும் வரை தொடரும். நமது போராட்ட வாளின் கூர் முனையை மேலும் தீட்டி வைப்போம். வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment