தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் (நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம்முதல்) வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க கோரி தமிழகத்தில் BSNL ஊழியர் சங்கமும் தமிழ்நாடு தொலைதொடர்புஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து 22.12.2017 மாலை நேர தர்ணாவையும், 27.12.2017 மாலை முதல் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம்முன்பும் காத்திருப்பு போராட்டங்களையும் நடத்தின. 28.12.2017 அன்று மாநில தலைமை பொதுமேலாளர் அழைத்து மாநில நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளை கூறி விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு இடையே நமது மாநில சங்கங்கள் சென்னையில் உள்ள Dy.CLC(C) அவர்களை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அப்போது அவரும் இதில் தலையிட்டு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் TNTCWU மாநில சங்கத்திடம் கலந்தாலோசித்து BSNLEU வின் மாநில செயலகம் கூடி இந்த போராட்டத்தை தற்போது விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 01.01.2018க்குள் ஊதியம் வழங்கப்படவில்லை எனில் 02.01.2018 முதல் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU ஆகிய சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகள் சென்னை தமிழ் மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமை பொது மேலாளரை சந்தித்து இந்த முடிவுகளை தெரிவித்ததுடன் போராட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்த ஊழியர்கள் மீது தல மட்டங்களில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை தலைமை பொதுமேலாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த போராட்டங்களில் கலந்துக் கொண்ட அனைத்து ஒப்பந்த மற்றும் நிரந்தர ஊழியர்களுக்கும் தமிழ் மாநில சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 02.01.2018 முதல் நடைபெற உள்ள போராட்டத்தில் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் கலந்துக்கொள்ள உடனடியாக ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். ஒன்று படுவோம். போராடுவோம். வெற்றி பெறுவோம்.
No comments:
Post a Comment