மதுரையில் 12.12.2017- முதல் நாள் வேலைநிறுத்தம் முழுமையாக மிக சிறப்பாக நடைபெற்றது .மதுரை தல்லாகுளம் வளாகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் வேலைநிறுத்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .
ஆர்பாட்டத்திற்கு தோழர் G.ராஜேந்திரன் NFTE தலைமை வகித்தார் .மதுரை ,திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட வேலைநிறுத்த நிலைமைகளை தோழர்
சி.செல்வின் சத்யராஜ் BSNLEU பேசினார். தோழர்.விஜயகுமார் SNEA,தோழர் A.அருணாச்சலம் AIBSNLEA, தோழர்.S.முத்துக்குமார் FNTO, தோழர் ஜெயபால் TEPU,ஆகியோர்கள் வேலை நிறுத்தத்தை விளக்கி பேசினார்கள்.மதுரை TNTCWU ஒப்பந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.தோழர் N சோணைமுத்து TNTCWUவேலை நிறுத்தத்தை விளக்கிபேசினார் தோழர் S.கந்தசாமி SEWA BSNL நன்றி கூறி ஆர்பாட்டத்தை முடித்து வைத்தார் . வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட போராட்ட வீரர்களுக்கு கூட்டமைப்பு போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டது.
No comments:
Post a Comment