bsnleu

bsnleu

welcome

welcome

Saturday, 30 December 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்திட 02.01.2018 முதல் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் காலவரையற்ற உண்ணாவிரதம்

தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் (நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதம்முதல்) வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க கோரி தமிழகத்தில் BSNL ஊழியர் சங்கமும் தமிழ்நாடு தொலைதொடர்புஒப்பந்த தொழிலாளர் சங்கமும் இணைந்து 22.12.2017 மாலை நேர தர்ணாவையும், 27.12.2017 மாலை முதல் அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம்முன்பும் காத்திருப்பு போராட்டங்களையும் நடத்தின. 28.12.2017 அன்று மாநில தலைமை பொதுமேலாளர் அழைத்து மாநில நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளை கூறி விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதற்கு இடையே நமது மாநில சங்கங்கள் சென்னையில் உள்ள Dy.CLC(C) அவர்களை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளனர். அப்போது அவரும் இதில் தலையிட்டு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் TNTCWU மாநில சங்கத்திடம் கலந்தாலோசித்து BSNLEU வின் மாநில செயலகம் கூடி இந்த போராட்டத்தை தற்போது விலக்கிக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. 01.01.2018க்குள் ஊதியம் வழங்கப்படவில்லை எனில் 02.01.2018 முதல் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU ஆகிய சங்கங்களின் மாநில சங்க நிர்வாகிகள் சென்னை தமிழ் மாநில தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமை பொது மேலாளரை சந்தித்து இந்த முடிவுகளை தெரிவித்ததுடன் போராட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்த ஊழியர்கள் மீது தல மட்டங்களில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை தலைமை பொதுமேலாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த போராட்டங்களில் கலந்துக் கொண்ட அனைத்து ஒப்பந்த மற்றும் நிரந்தர ஊழியர்களுக்கும் தமிழ் மாநில சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 02.01.2018 முதல் நடைபெற உள்ள போராட்டத்தில் இரண்டு மாநில சங்க நிர்வாகிகளும் கலந்துக்கொள்ள உடனடியாக ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். ஒன்று படுவோம். போராடுவோம். வெற்றி பெறுவோம்.

மதுரை BSNLEU புத்தாண்டு வாழ்த்து

Image result for happy new year 2018

Good Bye 2017.


The year 2017 is coming to an end. The year has been eventful for the BSNL employees. They took to the struggle path, to fight against the denial of 3rd wage revision. Two glorious strikes have taken place, demanding settlement of wage revision. This is the year in which the unions and associations buried their differences and decided to fight unitedly, under the single banner of "All Unions and Associations of BSNL". This is also the year in which the unions and associations of BSNL decided not to surrender in the matter of Subsidiary Tower Company, even after the Union Cabinet decided to form the same. Above all, even when big private telecom companies, like Vodafone and Idea run 'helter skelter', BSNL continues to add 20 lakh new mobile customers every month, and challenge Reliance Jio. While bidding good bye to 2017, we resolve to step into 2018, carrying forward all it's positivities.

IDA to increase by 2.6% w.e.f 01-01-2018.


As per reports, it is learnt that the IDA will increase by 2.6%, from 1st January 2018. Together with this total IDA shall be 126.9% w.e.f 01.01.2018.

Tuesday, 26 December 2017

மதுரை PGM (O)ல் காத்திருப்பு போராட்டம் 27.12.2017



Image result for காத்திருப்பு போராட்டம்


BSNL ல் பணி புரியும் தமிழக ஒப்பந்த தொழிளார்களுக்கு நவம்பர் மாத சம்பளம் 
இன்று வரை வழங்கப்படவில்லை.மாநில தழுவிய பல போராட்டங்கள் நடத்தியும். மாநில நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.எனவே BSNLEU + TNTCWU இரண்டு மாநிலசங்கங்களும் நாளை 27.12.2017 மாலை நான்கு மணியிலிருந்து காத்திருப்பு போராட்டம் நடத்த அறைகூவல் விட்டுருக்கிறது.எனவே மதுரை  BSNLEU + TNTCWU  இரண்டு மாவட்ட சங்க தோழர்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம் 
தோழமையுடன் 
C.செல்வின் சத்யராஜ் 
மாவட்ட செயலர் 

பழனியில் ஒப்பந்த உழியர் கிளை மாநாடு 24.12.2017


Image may contain: 3 people, people smiling
Image may contain: one or more people, people sitting, table and indoor

Image may contain: 4 people, people sitting

Image may contain: 2 people, people sitting and table

Image may contain: 9 people, people sitting

பழனியில் ஒப்பந்த உழியர் சங்கத்தின் கிளை மாநாடு 24.12.2017 அன்று சீரும் சிறப்புமாக தோழர் அமாவாசை தலைமையில் நடைபெற்றது .எழுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் .TNTCWU மதுரை மாவட்ட செயலர் தோழர் N .சோணைமுத்து கிளை மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினர் .தோழர் ரவிச்சந்திரன் கோவை மாவட்டசெயலர் TNTCWU .தோழர் சி.செல்வின் சத்தியராஜ் BSNLEU மதுரை மாவட்டசெயலர்  மற்றும் தோழர் K.பழனிகுமார் BSNLEU மாநில அமைப்புசெயலர் சிறப்புரை வழங்கினார்கள்.கிளை தலைவராக தோழர் P திருமூர்த்தி, செயலராக தோழர்      A அமாவாசை மற்றும் பொருளராக தோழர் K தண்டபாணி ஆகியோர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர் .இறுதியாக நன்றி கூறி மாநாடு நிறைவு பெற்றது.

சிறப்பான மதிய உணவை தோழர்கள் வழங்கினார்கள் .புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிளை நிர்வாகிகளை BSNLEU மதுரை மாவட்ட சங்கம் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிற
து.







Friday, 22 December 2017

மதுரையில் BSNLEU + TNTCWU மாலை நேர தர்ணா

தமிழக தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் என்பது 
எட்டாக்கனியாக இருக்கிறது.மாவட்டசங்கமும்,மாநிலசங்கமும் தொடர் முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும் தாமதித்திற்கான காரணங்கள் FUND வரவில்லை,பில் வரவில்லை என சொத்தை காரணங்களை சொல்லி கொண்டிருப்பதை நாம் ஏற்க முடியாது.எனவே நமது மாநில சங்கம் மாலை நேர தர்ணாவை நடத்த அறை கூவல் விட்டுருக்கிறது.
             
                           எனவே நாம் மதுரையில் தல்லாகுளம் அலுவலகத்தில் மாலை 
3 மணியளவில் கூடிடுவோம்.நமது முழக்கம் மாநிலநிர்வாகத்திற்கு எட்ட வேண்டும் .தர்ணாவை சக்தியாக நடத்துவோம்.

Image may contain: 2 people

Wednesday, 20 December 2017

Message from Com Abhimanyu GS BSNLEU

Allotment of funds, for payment of wages of TN contract workers, was discussed with the GM(BFCI) today. He has assured allotment soon.

Friday, 15 December 2017

வேலைநிறுத்த பத்திரிக்கை செய்திகள்

அருமைத்தோழர்களே .
BSNL லில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் கடந்த டிசம்பர் 12&13 ஆகிய இரண்டு தினங்கள் முழு வீச்சாக நடைபெற்றது. மதுரையிலும் மிகசிறப்பாக முழுவீச்சுடன் நடைபெற்றது.
                   வேலைநிறுத்த பத்திரிக்கை செய்திகள் மதுரையில் இந்து ஆங்கில 
பத்திரிகை,தீக்கதிர் ,தினமலர் ,தினத்தந்தி ,தினகரன் ,தினமணி மற்றும் மாலை 
மலர் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது .பத்திரிக்கை நிருபர்களுக்கு ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL MADURAI சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
clip

மகத்தான வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Image result for congrats images

01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் மற்றும் BSNL நிறுவனத்தை அழிக்கும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்ற 2017 டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் மதுரை ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து சங்கங்களின்  மாநில, மாவட்ட மற்றும் கிளை தலைவர்களையும் முன்னணி தோழர்களையும் மனதார வாழ்த்துகிறோம். நமது போராட்டம் முழு வெற்றி கிட்டும் வரை தொடரும். நமது போராட்ட வாளின் கூர் முனையை மேலும் தீட்டி வைப்போம். வாழ்த்துக்கள்.

Tuesday, 12 December 2017

திண்டுக்கல்,பழனி &தேனி வேலை நிறுத்த காட்சிகள்

Image may contain: 3 people, crowd and outdoor               Image may contain: outdoor


T










திண்டுக்கல்
Image may contain: 5 people, people standing, sky and outdoorImage may contain: 3 people, sky and outdoor

பழனி
Image may contain: 1 person, standing, walking and outdoor
THENI    Image may contain: 4 people, people smiling
Image may contain: 5 people, people smiling, people sitting







மதுரையில் 12.12.2017 வேலை நிறுத்தம் சிறப்பாக நடைபெற்றது

Image may contain: 2 people, people standing, crowd and outdoor

Image may contain: 6 people, people standing and outdoor



Image may contain: 14 people, people smiling, people standing and outdoor

மதுரையில் 12.12.2017- முதல் நாள் வேலைநிறுத்தம் முழுமையாக மிக சிறப்பாக நடைபெற்றது .மதுரை தல்லாகுளம் வளாகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் வேலைநிறுத்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் .
ஆர்பாட்டத்திற்கு தோழர் G.ராஜேந்திரன் NFTE தலைமை வகித்தார் .மதுரை ,திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட வேலைநிறுத்த நிலைமைகளை தோழர் 
சி.செல்வின் சத்யராஜ் BSNLEU பேசினார். தோழர்.விஜயகுமார் SNEA,தோழர் A.அருணாச்சலம் AIBSNLEA, தோழர்.S.முத்துக்குமார் FNTO, தோழர் ஜெயபால் TEPU,ஆகியோர்கள் வேலை நிறுத்தத்தை விளக்கி பேசினார்கள்.மதுரை TNTCWU ஒப்பந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.தோழர் N சோணைமுத்து TNTCWUவேலை நிறுத்தத்தை விளக்கிபேசினார்  தோழர் S.கந்தசாமி SEWA BSNL நன்றி கூறி ஆர்பாட்டத்தை முடித்து வைத்தார் . வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட போராட்ட வீரர்களுக்கு கூட்டமைப்பு போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டது.





Saturday, 9 December 2017

மதுரை TNTCWU வேலைநிறுத்த விளக்ககூட்டம் 09.12.2017



Image may contain: 9 people, people sitting, crowd, tree and outdoor

Image may contain: one or more people and outdoor

Image may contain: 2 people, crowd, tree and outdoor
  மதுரையில் 09.12.2017 அன்று டிசம்பர் 12 & 13 வேலை நிறுத்த விளக்ககூட்டம் 
தோழர் கே.வீரபத்திரன் மாவட்டதலைவர் தலைமையில் நடைபெற்றது .நூறுக்கும்மேற்பட்டதோழர்கள் கலந்துகொண்டனர்.தோழர்.என்.சோணைமுத் து மாவட்டசெயலர்  வரவேற்புரை நிகழ்த்தினார்.தோழர் சி.செல்வின்சத்யராஜ் 
மாவட்டசெயலர் BSNLEU,தோழர் S.சூரியன் விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.
தோழர். C .பழனிசாமி அகிலஇந்திய துணை பொதுசெயலர் BSNLCCWF வேலைநிறுத்த ஒன்பது கோரிக்கைகள் சம்பந்தமாக விளக்கவுரை நிகழ்த்தினார்.இறுதியாக தோழர் அன்பழகன் மாநில நிர்வாகி TNTCWU நனறிவுரை கூறி முடித்து வைத்தார் .

Sunday, 3 December 2017

STRIKE NOTICE . . .





ஊதிய மாற்றம் வழங்க எங்கே பணம் இருக்கிறது ?அமைச்சர் கேள்வி

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL ,BENGALURU தோழர்கள் கோரிக்கைமனுவை வழங்குவதற்கு 01.12.2017 அன்று மாண்புமிகு மனோஜ் சிங்ஹா MOS(o) அவர்களிடம்
சமர்பித்தனர். கோரிக்கைமனுவை படித்து பார்த்துவிட்டு ஊதிய மாற்றம் வழங்க
இலாக்காவில் எங்கே பணம் இருக்கிறது என்ற கேள்வியை கேட்டு உள்ளார் .மேலும்
BSNL கம்பெனி நிதி நிலை மிக மோசமாக இருக்கிறது .அரசாங்கத்தாலும் உதவி செய்ய
இயலாது என்று கூறி இருக்கிறார் .இதிலிருந்து  நாம் புரிந்து கொள்வது என்னவென்றால்
ஊதியமாற்றம் வழங்குவதற்கு அரசாங்கத்தின் மனநிலை இல்லை .எனவே
நாம் வேலைநிறுத்தத்தை வலிமையாக நடத்தவேண்டும் .

Saturday, 2 December 2017

27.11.12 - ALL UNIONS முடிவுகள்

மிலாது நபி வாழ்த்துக்கள்

Image result for eid milad un

அனைவருக்கும் இனிய மிலாது நபி வாழ்த்துக்கள் 
தோழமையுள்ள 
சி.செல்வின் சத்யராஜ் 
மாவட்ட செயலர் 


டிசம்பர் 12&13 வேலை நிறுத்த விளக்கக்கூட்டம்

Add caption

தேனியில் கோரிக்கைமனு சமர்பிக்கப்பட்டது

Image may contain: 8 people, people standing and indoor

தேனியில் கோட்ட அதிகாரி திருமதி ஸ்ரீ தேவி தலைமையில் கோரிக்கைமனு 
சமர்பிக்கப்பட்டது .BSNLEU,SNEA,&TEPU தோழர்கள் கலந்து கொண்டனர். மாவட்டசங்கத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் .
தோழமையுள்ள 
சி.செல்வின் சத்யராஜ் 
மாவட்டசெயலர்






Friday, 1 December 2017

திண்டுக்கல் M.P.யிடம் மகஜர் சமர்பித்தல்

Image may contain: 6 people, people smiling, people standing and indoor

திண்டுக்கலில் நமது ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL லிருந்து திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய உதயக்குமார் அவர்களிடம்30.11.2017 அன்று  மகஜர் சமர்பிக்கப்பட்டது .அதில் BSNLEU சார்பாக தோழர்கள் K.S.ஆரோக்கியம் ,சுமதி ,பாக்கியராஜ் ,NFTEசார்பாகதோழர்அருளானந்தமமற்றும்SNEAசார்பாகதோழர்கள்சந்திரகுமார்,முத்துக்குமார்,வாசு ஆகியோர்கள் பங்கேற்று  மகஜரை சமர்த்திருக்கிறார்கள் ,அவர்களுக்கு BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

தோழமையுடன் 
சி.செல்வின் சத்யராஜ்
மாவட்ட செயலர்