bsnleu

bsnleu

welcome

welcome

Saturday, 27 May 2017

மே-26, தீர்விற்கு திட்டம் தீட்டிய மாவட்ட செயற்குழு...

அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், மாவட்டத்தலைவர் தோழர்.எ.பிச்சைக்கண்னு தலைமையில் மிகவும் சீரிய முறையில் 26-05-17 வெள்ளி அன்று மதுரையில் நடைபெற்றது.  மாவட்டச் செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் அஜெண்டா மீதான அறிமுக உரை நிகழ்த்தினார். ஈரோடு மாநில மாநாட்டில் மாநில சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள், கே.பழனிக்குமார், பி.சந்திரசேகர், பி. ரிச்சர்ட் ஆகியோருக்கு மாவட்ட சங்கத்தால் பாராட்டப்பட்டது.
ஆய்படுபொருளின் மீது , தேனி , திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று ரெவன்யூ மாவட்டங்கள் சார்பாக நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர். செயற்குழுவில் எழுந்த கருத்துக்களின் அடிப்படையில், மாவட்டச் செயலர் தோழர் செல்வின் சத்திய ராஜ் தனது தொகுப்புரையில்...  குறிப்பாக ஒரு சில துணைக்கோட்ட அதிகாரிகளின் நடவடடிக்கை வருத்தமளிப்பதாக உள்ளது என்றும், இது குறித்து சம்பந்தப்பட்ட வர்களிடமும், மாவட்ட நிர்வாகத்திடம் விவாதித்தும் போதிய முன்னேற்றம் எட்டவில்லை என்பதையும் குறிப்பாக பொது மேலாளர் திருமதி.S.E.ராஜம்  ITS அவர்களின் நிலைப்பாடு ஏற்புடையதாக இல்லை என்பதையும் நமது  மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்.  குறிப்பிட்ட காலவரைக்குள் பிரச்சனைகள் தீர்வில் முன்னேற்றம் இல்லாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வது என செயற்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்பின் இம் மே மாதம் பணிநிறைவு செய்யும்  நமது மாவட்ட சங்க நிர்வாகி அருமைத் தோழர் .எஸ். மனுவேல் பால்ராஜ் அவர்களுக்கு மாவட்ட சங்கத்தின் சார்பாக பணிநிறைவு பாராட்டு விழா மிக விமர்சியாக நடத்தப்பட்டது. மாநில சங்க நிர்வாகிகளும், மாவட்ட சங்க நிர்வாகிகளும் தோழர்.எஸ். மனுவேல் பால்ராஜ் அவர்களை பாரட்டிப் பேசினர். மாவட்ட சங்கத்தின் சார்பாக கவரவிக்கப்பட்டு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தோழர்.எஸ். மானுவேல் பால்ராஜ் ஏற்புரைக்குப்பின் தோழர்.என். செல்வம் நன்றியுரை கூற நிகழ்சசி இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment